பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் (19) ஒருதலைவன்மை ' வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகும் ” (தொல்-எழுத்-உயிர் : 33) என விரித்தாற் போலாது இலக்கணங் கூறி ஒழிதல் : அது , ' குறியதன் முன்ன ராய்தப் புள்ளி யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே ’’ (தொல்-எழுத்-மொழி : 5) என்றக்கால் யாண்டும் ஒருதலையாக வாராது, வருஞான்று வரு வது ஆண்டென்று கொள்ளவைத்தல், இனிச், சொல்லோத்தினுள் வேற்றுமையென்று ஒதப் பட்ட எட் னுள் எழுவாய்வேற்றுமையினையும் விளி வேற்றுமையினையும் வேற்றுமையென்னாது எழுத்தோத்தி னுள் அல்வழியென்றல் போல்வன அதற்கு இனமெனப்படும். (20) முடிந்தது காட்டல் - சொல்லுகின்ற பொருட்கு வேண்டுவனவெல்லாஞ் சொல்லாது தொல்லாசிரியர் கூறினா ரென்று சொல்லுதல். அஃது ஒன்றறிவது உற்றறிவ தென்றற்கும், இரண்டறி வது உற்றுஞ் சுவைத்தும் அறிவது என்றற்கும் முறைமையாற் சூத்திரஞ் செய்வான் அவை அவ்வாறாதற்குக் காரணங் கூறாது, 'நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே' (தொல்-மர : 27) என முடிந்தது காட்டல், 'நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறே' (தொல்-எழுத்-நூன் : 1) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். (21) ஆனை கூறல் - இவ்வாசிரியன் கருத்து இதுவெனக் கொள்ள வைத்தல் : அது, “ அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து வஞ ந வாகும்’ (தொல்-எழுத்-புண : 27)