பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 2総? உணர்த்தும் முறைமையே உத்தி எனப்படும். இது தந்திரவுத்தி என அடை புணர்த்து வழங்கப்பெறும். தந்திரம்-நூல். உத்தியுத்தி. தந்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்திற்கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது' என விளக்குவர் இளம்பூரணர். உத்தி யினை நூற்புணர்ப்பு என வழங்குதலும் உண்டு. உத்தி இன்ன தென்பதனை விளக்கும் முறையில் அமைந்தது. 'நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக்காட்டி ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் தரும்வகை செலுத்துதல் தந்திரவுத்தி” (நன்னூல்-பாயிரம் சூத்-15) எனவரும் நூற்பாவாகும். எல்லா நூற்கும் ஆவதோர் இலக்கணம் உணர்த்துவதாக அமைந்தது. 'ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புனரின் நூலென மொழிப துணங்கு மொழிப் புலவர்' (கoஅ) எனவரும் தொல்காப்பிய மரபியற் சூத்திரமாகும். சூத்திரத்தின் பொருளை விரித்துரைக்குமிடத்துக் காண்டிகையுரையும், அவ் வுரையாலும் விளங்காக் காலத்து அதனையும் விளங்க விரித் துரைக்கும் உரைவகையும் உடையதாகிப் பத்துவகைக் குற்றமும் இன்றி நுண்பொருளவாகிய முப்பத்திருவகையுத்தியொடுபொருந்தி வருவது நூலாகும் என்று நுண்ணறிவுடைய புலவர்கள் நூலுக்கு இலக்கணங் கூறுவர்' என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இதன் கண் முப்பத்திருவயையுத்தி எனத்தொகுத்துரைக்கப்பட்ட உத்திகளை விரித்துக் கூறித் தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங் கட்கும் வேண்டும் புறனடையுங் கூறுவது. 'ஒத்த காட்சி யுத்திவகை யுரைப்பின் நுதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் மொழியா ததனை முட்டின்றி முடித்தல்