பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் - 3? பாடலுட் பயின்றவை நாடுங் காலை’ (தொல்-அகத்: 3) எனவும், - 'பாடல் சான்ற புலனெறி வழக்கு' (தொல்-அகத்: 53) எனவும், அகத்திணையியலுட் கூறிய புலனெறி வழக்கிற்றாகிய இளைமை சொல்லுங்காலை அவையல இல-அவற்றுக்கு ೩ಉಹ66Tು கூறுங்கால், வேறு பலவின்றி வரும்; இங்ங்னம் வரையறைப் பட்டன. இன்றி (எ-று). "இளைமையும் அவையல இலவெனவே அதற்கு மறுதலை யாகிய முதுமையாயின் அவையல திலவென்பதோர் வறையரைப் படுத்து இலக்கணங் கூறப்படாவென்பது கருத்து. சொல்லுங்காலை யென்றதனாற் சொல்லாத இளமைப் பெயருங் கொள்க, அவை, 'நன்னாட் பூத்த நாகிள வேங்கை’ - (அகம்:85) எனவும், 'நாகின வளை’ (புறம்:265) எனவும், கணைக் கோட்டுவாளைக் கமஞ்சூன் மட நாகு' (குறுந்:164) எனவும், ‘எருமை நல்லான் கருநாகு பெறுTஉம்' (பத்துப்-பெரும்பாண் : 165) எனவும் வரும், இவற்றுள் ஒரறிவுயிர் முதலாக ஐந்தறிவுயிரளவும் நாகென்னும் இளைமைப்பெயர்1 வரையறையின்றிச் சென்றது: வண்டெண்பதற்கும் ஒக்கும், அது விரவுப் பெயராகலின். 1. நாகுபுன்னைபூத்தன (சீவக : 74) என்பதன் உரையில் சொல் லுங்காலை (மரபியல்-உசு) என்றதனால் நாகு பெண்மை முேயன்றி இளமையும் உணர்த்திற்று. நாகுமுதிர் துனவம்' (சிறுபாண் : 51) என்றார் பிறரும் எனப்பேராசிரியர் உரை யை அடியொற்றி நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுத் தந்தார்.