பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器懿 தொல்கடிப்பியம் ஆய்வுரை : இச்சூத்திரம் இளமைப்பெயர் பற்றிய அதிகாரத்தை முடித்துக் கூறுகின்றது. (இ-ன்) இங்கு எடுத்துக்கூறிய இளமை பற்றிய மரபுப் பெயர்களை மேலும் விரித்துச் சொல்லுங்கால் மேல் எடுத்துக் கூறிய அப்பெயர்களன்றி வேறு இல்லை எ-று. 'பரந்துபட்ட உயிர்த்தன்மையெல்லாம் ஈண்டு (விரித்து) ஒதப்பட்டன அல்ல; எடுத்து ஒதாதனவற்றுக்கு ஈண்டு ஒதப்பட்ட இளமைப்பெயரல்லது பிறபெயர் இன்மையின் இவற்றுள் ஏற்பன வற்றோடு கூட்டியுரைக்க என்றவாறாம்’ எனக் கருத்துரைப்பர் இளம்பூரணர். சொல்லுங்காலை யென்றதனான் சொல்லாத "நாகு'என்னும் இளமைப்பெயரும் தழுவிக்கொள்வர் பேராசிரியர். அவையல்லது பிறவில்லை’ என்றமையின் ஒன்றற்குரிய வற்றை ஒன்றற்குரியவாக்கி வழங்குவனவும் கொள்ளப்படும். இனி, எடுத்தோதாதனவற்றுள் புலிக்குரிய மரபுப்பெயர் சிங்கத்திற் குரியவாகவும், அணிலுக்குரிய மரபுப்பெயர் உடும்பு, ஓந்தி, பல்லி என்பவற்றுக்குரியதாகவும் இவ்வாறே பிறவும் இவ்வகையின் ஏற்பனவும் கொள்ளப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். 'சொல்லுங்காலை என்றதனால் நாகு என்னும் பெயர் பெண்மையேயன்றி நாகுமுதிர் துணவம் (சிறுபாண்-51) என இளமையையும் உணர்த்திற்று என எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவர் நச்சினார்க்கினியர். (2.5m) 2எ ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே ஆறறி வதுவே அவற்றோடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின், உலகத்துப் பல்லுயிரை யும் அறியும், வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் துதலிற்று.