பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தொல்காப்பியம் பேராசிரியரும் விளக்கம் கூறுவர். எனவே விலங்கும் பறவையும் என மேற்கூறப்பட்ட ஐயறிவுயிர்களுள் குரங்கு, யானை, கிளி முதலியவற்றுள் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஆறறிவுயிராய் அடங்கும் என்பது புலனாகும். இக்கருத்தினை யுளங் கொண்டே, மனுவின்நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (கம்ப - வாலிவதை - 120) என்றார் கவிச் சக்கர வர்த்தி கம்பரும். இங்கு எடுத்துக் காட்டப் பெற்ற ஐயறிவுயிர் ஆறறிவுயிர் பற்றிய கருத்துக்கள் யாவும் மரபியல் உ, E-ஆம்சூத்திரங்களால் நன்கு புலப்படுத்தப் பெற்றமையால், இவற்றின் பின் இளம்பூரண ருரையில் மட்டும் நச ஆம் சூத்திரமாகக் காணப்படும் ஒரு சார் விலங்கும் உளவென மொழிட என்ற நூற்பா தொல்காப்பியச் சூத்திரம் அன்றெனவும் இங்குக் குறித்த தொல்காப்பியச் சூத் திரங்களின் பொருளை அடியொற்றிப் பிற்காலத்தில் இயற்றப் பட்ட பழஞ்சூத்திரமாதல் கூடும் எனவும் கருத வேண்டியுள்ளது. (西历) சு.ச. ஒருசார் விலங்கும் உளவென மொழிப. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். இதுவுமது. (இ-ள்) விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராமென்ற வாறு. அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. மேல் ஒரறிவுயிரெனத் தோற்றுவித்தார்; அதனானே இச் சூத்திரங்கள் ஈண்டுக் கூறப்பட்டன . 1. இவ்வியல் உச-ஆம் நூற்பாவில் பிள்ளை, குழவி, கன்று, போத்து என்னும் இளமைப்பெயர்கள் ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்றார். அச்சூத்திரத்தில் ஓரறிவுயிர் தோற்றுவாய் செய்யப்பெற்றமையால் அதனைத் தொடர்ந்து ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகையுயிர் பற்றிய நூற்பாக்கள் ஈண்டுக் கூறப்பட்டன என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும்.