பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

溪移 தொல்காப்பியம் பேராசிரியம் : ‘மக்கடாமே ஆறறிவுயி ரெனப் பிரித்துக கூறினமையால் ஆண்பால் அதிகாரப்பட்டது.கண்டு மற்றை விலங்கினுள் ஆண் பாற்குரிய ைகூறிய தொடங்கியவாறு. நிறுத்தமுறையாற் கூறாது களிற்றினை முற்கூறினான் அப்பொருள் விலங்கினுட் சிறந்தமை யானென்பது? . ஏறும் ஏற்றையும் பயின்ற வரவினவாகலின் முதற்சூத்திரத்துண் (566) முற்கூறினானென்பது.? (இ-ள். யானைக்கு விதந்து களிறென்றலுரித்து, கேழற்கண் ணுஞ் சிறுபான்மைவரும் (எ-று). 'விதந்'தென்ற விதப்பினாற் களிறென்பது சாதிப்பெயர்போல வும் நிற்குமென்பது; அஃதாவது, யானையென்னுஞ் சாதிப்பெயரி னைக் களிறென்னும் பெயர் வந்து குறிப்பித்தாற் 'கடுங்களிற் றொருத்தல்' (கலி: 2) என்றும் ஆகுமென்பது. 'இரலைமா னேறு என்பதும் அதனாற் கொள்க. பன்றிக்கும் அவ்வாறு வருவனவுளவேற் கொள்க. "கேழற் பன்றி' (புறம்: 152) என்பதனைக் களிற்றுப்பன்றி யென்றுஞ் சொல்லுப. ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே ஆண்பாற்குரிய மரபுப்பெய ரினை வகுத்துக் கூறுகின்றது. (இ-ஸ்) களிறு என்னும் ஆண்மைப்பெயரால் சிறப்பித்துக் கூறப்படுதல் யானைக்கு உரித்து எ-று. (Eடு) 1. மக்கள் என்பது ஆண் பெண் இருபாற்கும் உரியதாயினும் ஆண்பாற்குச் சிறப்புரிமையுடையதாய் வழங்குதலின் ஆண் பால் அதிகாரப்பட்டது என்றார். 2. விலங்கினுள் யானை சிறந்ததாதலின் அதற்குச் சிறப்புரிமை யுடைய ஆண்பாற் பெயராகிய களிற்றை முற்கூறினார். 3. ஆண்பாற் பெயர்களுள் ஏறு,ஏற்றை என்பன பெரும்பான்மை யாக வழங்குவனவாதலின் இவ்வியல் இரண்டாஞ் சூத்திரத் துள் ஆண்பாற் பெயர்களுள் முற்கூறப்பட்டன.