பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ?. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

'பொய்கைப்பள்ளி (63) எனவரும் ஐங்குறு நூற்றுப்பாடல், பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகனை நோக்கித் தலைமகள் புலந்து கூறுவதாக அமைந்ததாகும். இதன்கண்,பொய்கையாகிய தூய இடத் திற்பிறந்த நீர்நாயானதுதான் முதல்நாள் தின்ற வாளைமீனின் புலால் நாற்றத்தோடும் மறுநாளினும் அதனையே விரும்பிப்பெறும் ஊருக் குரிய தலைவனே எனத் தலைவனை அழைக்குமுகமாக, அத்தலை வன் நல்லகுலத்திற் பிறந்தும் இழிகுலத்தாராகிய பரத்தையரைத் தோய்ந்து பின்னும் அவரையே நாடிச் சேர்தலைக் கருதியுணர வைத்தமையின், இது பிறப்புப் பற்றி வந்த உள்ளுறையுவமமாகும். இவையெல்லாங் கருதிக் கூறின் செய்யுட்குச் சிறப்பாதலும், இவ் வுட்கருத்தின்றி "நீர்நாய் வாளை பெறு உம் ஊரன்’ எனவறிதே கூறின் ஒரு பயனுமில்லையாதலும் உணர்ந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் இவ்வுள்ளுறையுவமத்தால் திணையுணருமுறையினைச் சிறப்பாக வற்புறுத்துவாராயினர். வினை, பயன், மெய், உரு என் பனபற்றி வரும் ஊள்ளுறையுவமைகளும் இவ்வாறே கருதியுணர்ப் படும்.

உசு. கிழவி சொல்லின் அவளிறி கிளவி:

இளம்பூரணம்

என் - எனின். மேற்சொல்லப்பட்ட உவமை கூறுவார்

பலருள்ளுந் தலைமகட்குரியதோர் பொருள் வரையறுத்துணர்த்து தல் துதலிற்று.

(இ - ள்.) உவமைப்பொருளைத் தலைமகள் கூறில் அவளறிந்த

பொருட்கண்ணே உவமை கூறப்படும் என்றவாறு."

எனவே தானறியாத பொருட்கண் கூறினாளாகச் செய்யுட் செய்தல் பெறாது என்றவாறு. -

உதாரணம் தலைமகள் கூற்றுட் கண்டுகொள்க. (உசு)

1. தலைமகள் உவமை கூறுங்கால் தானறிந்த பொருள்பற்றியே 之.Q枋返盘

கூறு தற்குரியள் என்பதாம்,