பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卒

&T

உவமையியல் - நூற்பா )

பென்னும் நிலைக்களத்து நீங்காச் சிறப்பின் வரூஉம் வழக்கப்

பாட்டினையுடைய என்றவாறு '

எனவே, வழக்கின்கட் பயின்று வாராத இறப்பவுயர்தலும் இறப்ப விழிதலும் ஆகா வென்றவாறு.?

'அவாப்போ லகன்றதன் அல்குன்மேற் சான்றோர்

உசாஅப்போல வுண்டே மருங்குல்' -

என்றவழி அல்குல் பெரிதென்பான் ஆசையோடுவ மித்தலின் இது தக்கதாயிற்று, மருங்குல் நுண்ணிதென்பான் சான்றோ ருசாவொடு உவமித்தலின் அதுவும் தக்கதாயிற்று. அவை சிறப்புப் பற்றி வந்தன.

இனி, நெறிப்பாடின்றி வருவன இறப்ப உயர்தலும் இறப்ப இழிதலும் என இருவகைப்படும்.

இந்திரனே போலு மிளஞ்சாத்தன்...நாறுமினர். (யாப். வி. ஒழி.)

இஃது இறப்பவுயர்ந்தது. வழக்கிறந்துவருதலின் இவ்வாறு

வரும் உவமை கூறப்படாது.

“வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு நான்குழாம்

எள்ளி யிரிவதுபோ லெங்கெங்கும்-வள்ளற்கு மாலார் கடல்போல மண்பரந்த வாட்டானை மேலாரு மேலார் விரைந்து.' (யாப். வி. ஒழி.)

இஃது இறப்ப இழிதலின் இதுவு மாகாது.

அஃதேல் நாயனை யார் கேண்மை தழிஇக் கொளல்வேண்டும்’ (நாலடி உகங்) என வருமால் எனின், அது நாயின்கட் கிடந்ததோர் நற்குணம்பற்றி வருதலின் இறப்ப இழிதல் ஆகாது. (Ξώ)

1. சிறப்பிற்றிராக்குறிப்பு' என்றது, உ வ ைமயின் ஐவகை நிலைக் களன்களுள் ஒன்றாகிய சிறப்பென்னும் நிலைக்களத்தின் நீங்கா க்குறிப்பொடுக. டிவரும் வழக்கு நெறிப்பயிற்சியினைக் குறிப்பதாகும்.

2. பெருமையும் சிறுமையுமாகிய இவை வழக்குப்பயிற்சியின் மாறுபடாது உவமை யாய் வருதல் வேண்டும் எனவே உலகவழக்கினை க் கடந்துவரும் இறப்பவுயர்வும்

இறப்பு விழி வும் ஆகிய பெருமை சிறுமைகள் உவமையில் இடம்பெறா என்பதாம்.