பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fఖి: தொல்காப்பியம்-பொருளதிகாரம்

களும் பிறவும் உவமத்தொகை யெனப்படா, தொகைப் படாமையி னென்பது. அங்கனத் தொகைப்பட்ட வழியும் மற்று மேலுரிமை கூறுகின்றதாமென்பது."

மதியொத்தது மாசற்ற திருமுகம்”

ຄສໍrporg, உவமமாயினும் உவமத்தொகை யெனப்படாது தொகைப்பாடின்மையினென்பது.* (சசு)

ஆய்வுரை

இஃது, உவமவுருபுகளைத் தொகுத்துக்கூறுகின்றது.

இ-ள்) (உவமத்தினையும் பொருளினையும் ஒப்பும்ை காட்டி இயைத்துரைக்குங்கால் அவற்றிடையேவரும் சொல்லாகிய) உவம வுருபுகள்தாம் அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன , மான எனவும் ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப எனவும் எள்ள விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப எனவும், காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப எனவும், புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ எனவும் நாட, நளிய, நடுங்க, நந்த, ஒட, புரைய எனவும் ஆறு ஆறாக எண்ணப்பட்டு வரும் முப்பத்தாறும் அவைபோல்வன பிறவுமாகிக் கூறுங்கால் பல்வேறு குறிப்பினவாய் வரும். (எ று)

இதன்கண், அன்னபிறவும் என்றதனால் இச்சூத்திரத்திற் சொல்லப்படாத நோக்க, நேர, அனைய, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ட, மலைய, அமர முதலிய பிறவுருபுகளும், ஐந்தாம் வேற்றுமைப்பொருள்பற்றி வரு வனவும் ஆகிய வுவமவுருபுகளெல்லாந் தழுவிக்கொள்ளப்பட்டன. புலிபோன்ற சாத்தன்” எனப் பெயரெச்சமாகவும், புலிபோலப் பாய்ந்தான்’ என வினையெச்சமாகவும், சாத்தன் புலிபோலும் என வினைமுற்றாகவும், அன்ன, இன்ன என இடைச்சொல்லாகவும் இங்ங்ணம் பல்வேறு வடிவங்களில் உவமவுருபுகள் பயின்று வருதல் பற்றிக் கூறுங்காலைப் பல்குறிப்பினவே” என்றார் ஆசிரியர்.

1. இத்தொடர், அங்கணக்தொகைப்படாழிையும் மற்று மேலு:வமை கூறு கின்றதாமென்பது என்றிருப்பின் பின்வரும் உதாரணத்துடன் இயைபுடையதாகும்.

2. மர சறு திருமுகம் மதியொத்தது என எழுவாயும் பயனிலையுமாகப்பிரிந்து ஒன் துதலின், தொகைப்பாடி லதாயிற்று என்க.