பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் {عے معنی

‘புலி யென்னக் கலிசிறந் துராஅய்'

'மின்னுற திமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு-85)

"பொருகளிற் றெருத்திற் புலித்தகைப் பாய்த்துள்’’

"மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார்’

என வரும்.

இனிக், !

'கார்மழை முழக்கிசை கடுக்கும்’ (அகம். 14)

  • யாழ்கெழு மணிமிடற் றந்தனன்’’.(அகம்.கடவுள் வாழ்த்து)

"ஒளித்தியாங்கு மரபின் வயப்புலி போல’’ (அகம். 22)

"ஒமுகை நோன்பக டொப்பக் குழீஇ' (அகம், 30)

'குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின்’

(பத்துப் பெரும்பாண். 13)

எனப் பிறவாய்பாட்டாற் சிறுபான்மை வரும் ສ.ສ.ສ.ບຸລມ. பொது விதியாற் கொள்ளப்படும்”, பிறவுமன்ன.

ஆய்வுரை

இது, மேற்கூறிய உவமவுருபுகளுள் வினையுவமத்திற்குரிய உருபுகள் இவையென்கின்றது.

(இ-ள்) அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க எனக் கருதத்தகும் எட்டும் வினையுவமத்திற்குரிய உருபு

களாம். (எ-று}

இவையெட்டுருபுகளும் தொழில்நிலை சுட்டும் குறிப் புடைமையின் வினையுவமத்திற்குரிய உருபுகளாயின.

!. இனி என வரும் பகுதியைக் கூர்ந்து கோக்கும் வழி இதற்குமுன் என வரும் என்றதொரு தொடர் அமைந்திருத்தல் வேண்டும் என்பது புலனாம்.

2. இங்குஎடுத்துக்காட்டியபடி கடுக்கும், கெழு முதலிய பிறவாய்ப்பட்டாலும் சிறுபான்மை வினை புவமம் வருதல் இவ்வியல் யக-ஆம் சூத்திரமாகிய பொது விதி யாற் கொள்ளப்படும்: