பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உக எதி

இதற்குப் பேராசிரியர் தரும் பொருள் விளக்கமும் எடுத்துக்காட்டும் கற்போர் மனங்கொளத்தக்கனவாகும்.

உக, உவமப் பொருளை உருைங் காலை

மருவிய மரபின் வழக்கொடு வருமே*. இளம்பூரணம்

என்- எனின். மேலதற்கோர் புறனடை புணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்) உவமப்பொருளை உவமிக்கப்படும் பொருளாக உணருங்காலை மருவிய மரபினனாய வழக்கொடுவரும் என்றவாறு,

எனவே, மருவாதன அவ்வாறு கயல்சிலை என்றாற்போலக் கூறப்படா வென்றவாறு."

பேராசிரிய :ம்

இது, மேலதற்கொரு புறனடை, மேல் உவமப்பொருளானே உற்றதுணரச் செயல் வேண்டுமென்றான், இனி அங்ங்னம் உணரு மாறு இது கூறினானாதலின்.

அது வருமா ஐ :

(இ-ன்.) உவமப்பொருளான் உற்றதுணருங்காலை மரீஇ வந்த வழக்கொடுபடுத்து அறியப்படும் (எ-று).

அது வருமாறு :

'களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா’’ (அகம். 16)

என்பது களவுடம்படுநர்க்குள்ள வேறுபாடு உலகத்து அடிப்பட வந்த வழக்காதலான் அஃது ஏதுவாக, அதனையும் அறிந்து கொள்ளப்

"ഥ"ളൂ. மரபின் வழிக் கொடு படுமே என்பது பேராசிரியர் கொண்ட . تn L-ti لیا

1. மேற்குறித்தவாறு உவமையைக் கூறிய அளவில் இவ்வுவமையை உவ மிக்கப்படும் பொருளாக உணர்தல் என்பது, உலக வழக்கில் அவ்வுவமைகள் அவ் வப்பொருள்கட் குரியனவாகத் தொன்றுதொட்டு வழங்கிவரும் மரபினை யுளத் துட் கொண்டு போருந்தி வரும் என்பதாம். எனவே வழக்கொடு பொருக்தி வாராத உவமைகளைக் கூறிய அளவிலேயே அவ்வவ்வுவமை களைக்கொண்டு உவமேயப் பொருளை புற்றுணர்தல் இயலாது என்பதாம்.

2. அஃது ஏதுவ க - அவ்வழககுக் காரணமாக, அதனை பும்- உவமேயப்

பொருளையும்