பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# தொல்காப்பியம்-பொருளதிகாரம்

எனவே, அருத்தாபத்தியாற் புணர்ந்து உடன் போகாத தலைவி மனைக்கணிருந்து தலைவன் கூறக்கேட்டு அக்கருப் பொருள்கள் தன்மேல் அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது; வருவரெனத் துணிந்து கூறுதலாமென்றாராயிற்று.

'கான யானை.........வல்லுவோரே. (குறுந்- 79)

புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை அழைக்கும் லருத்தங் கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சிய

வாறு காண்க.

'அரிதாய வறனெய்தி' என்னும் (11) கலிப்பாட்டுத் தலைவன் அன்புறுதக்கன கூறக் கேட்ட தலைவி அவற்றைக் கூறிப் புனைநலம் வாட்டுநர் அல்லரென வரவு கருதிக் கூறிய வாறு காண்க. இதனுள் ஆற்றுவிக்குந் தோழி வருவர் கொல் லென ஐயுற்றுக் கூறலின்மையின் தோழி கூற்றன்மையும் உணர்க.

"புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன” (கலி. 3) என்றாற் போல்வன தலைவி கூற்றாய் வருவன உளவாயின் இதன் கண் அடக்குக. (எ)

ஆய்வுரை இது தலைவிக்குரிய கூற்றுக்களில் ஒன்றற்குரிய இயல்பு கூறுகின்றது.

( இ-ள்) க ள .ெ வா ழு க் க த் தி ல் த ைல வ னு ட ன் கூடி, உடன்போக்கிற் சென்ற தலைவி, பின்னர் மனையறக் கடமைபூண்டு மனைக்கண் இருந்து, சுரத்திடையே தலைவனொடு சென்றபோது தான் முன்பு கண்ட கருப்பொருள்களையும் அவற்றின் தொழில்களையும் சுட்டித் தலைவன் தன் மேல் அன்புகூர் தற்குத் தக்கவற்றைக் கூறுதலே தலைவன் பிரிந்து சென்று செய்யும் வினைக் கண் அளுசும் அச்சத்திற்குக் காரணமாகும். எ- று.

1. “அரிதாப அறனெய்தி" ( கலித்-ii ) என்ற பாட்டு தலைவி கூற்றாகுக்

என்பது கச்சினார்க்கினியர் கருத்தாகும்.