பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா க

நச்சினார்க்கினியம் : என்பது சூத்திரம். இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோளிரண்டினுட் கற்புணர்த்தினமையிற் கற்பியலென்னும் பெயர்த்தாயிற்று. கற்பியல் கற்பினது இயலென விரிக்க. இயல், இலக்கணம். அஃது ஆகுபெயரான் ஒத்திற்குப் பெயராயிற்று. அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுதுகுரவர் கற்பித்த லானும், 'அந்தணர்திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் ! ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்’ (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலை வனுங் களவின்கண் ஒரையும் நாளுந் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஒத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று, களவு வெளிப்பட்ட பின்னராயினும் அது வெளிப்படாமையாயினும் உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்தவழியாயினும் வரைதல் அக் களவின் வழி யாதலின் மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச்சூத்திரம் கற்பிற்கெல்லாம் பொது விலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) கற்பு எனப்படுவது-கற்பென்று சிறப்பித்துக் கூறப் படுவது: கரணமொடு புணர-வேள்விச் சடங்கோடே கூட: கொளற்கு உரி மரபிற் கிழவன்-ஒத்த குலத்தோனும் மிக்க குலுத் தோனுமாகிக் கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலை வன்; கிழத்தியை-ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளுமாகிய தலைவியை கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப-கொடுத் தற் குரிய முறைமையினையுடைய இருமுதுகுரவர் முதலாயினார் கொடுப்ப; கொள்வது-கோடற்றொழில் (எ.று.)

பெருந்திணைப்பாற்படும். ஈண்டு ஐக்திணை தழுவிய அகத்தினையே களவுகற்பு எனப் பகுத்தார் என்று கொள்க’ என இவ்வுரைப் பகுதியை இயைத் துப் பொருள் காண்க. இதன் நடுவே 'கொடுப்போரின்றியும் கரணமுண்டே, புணர்ந்துடன் போகிய காலையான என அடுத்துவரும் நூற்பா தொடர்பின்றி இடம்பெற் றிருப்பது ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாகும்.

1. கரணம் என்பதற்கு வேள்விச் சடங்கு என கச்சினார்க் கினியர் தரும் விளக்கம், கான்மறை வழியே வேள்விபுரிந்தொழுகுக் தொழிலினராகிய வேதியர்க் கன்றித் தமிழக மக்கள் அனைவர்க்கும் பொருந்துவதாகாது. கரணம் என்பது திருமணச் சடங்கு என்னும் பொதுப்பொருளிலேயே இங்கு வழங்கப் பெறுகின்றது. பண்டைத் தமிழக மக்கள் மேற்கொண்ட திருமணமுறையில் இடம்பெற்ற கரணங்