பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

'எனப்படுவது' என்னும் பெயர் கொள்வது என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது; இது சிறப்புணர்த்துதல் 'அவ்வச் சொல்லிற்கு (தொல். சொல். இடை.47) என்னுஞ் சூத் திரத்துட் கூறினான். கொடுப்போ fன்றியும்’ (தொல். பொ. 143) என மேல் வருகின்றதாகலின் இக் கற்புச் சிறத்தலிற் சிறந்த தென்றார். இஃது என என்கின்ற எச்சமாதலிற் சொல்லளவே எஞ்சிநின்றது. இதனாற் கரணம் பிழைக்கில் மரணம் பயக்கு மென்றார். அத் தொழிலின் நிகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும், இவற்கு இன்னவாறே நீ குற்றேவல் செய்தொழுகெனவும் அங்கியங்கடவுள் அறிகசியாக மந்திர வகை பாற் கற்பிக்கப்படுதலின் அத் தொழிலைக் கற்பென்றார். தலை வன் பாதுகாவாது பரத்தைமை செய்து ஒழுகினும் பின்னர் அது கைவிட்டு இல்லறமே நிகழ்த்தித் துறவறத்தே செல்வனென் றுணர்க. இக் கற்புக்காரணமாகவே பின்னர் நிகழ்ந்த ஒழுகலா நெல்லாம் நிகழவேண்டுதலின் அவற்றையுங் கற்பென்று அடக் கினார். இருவரும் எதிர்ப்பட்ட ஞான்று தொடங்கி உழுவலன்

கள் இவையென்பது தம்காலத்து மக்கள் அனைவர்க்கும் நன்கு தெரியுமாதலால் ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் இயற்றிய இலக்கண நூலில் அவற்றை விரித்துக் கூறவேண்டிய இன்றியமையாமை கேர்க்திலது.

தொன்றுதொட்டுத் தமிழ் மக்கள் கொண்டொழுகிய திருமணச் சடங்கு கள் சிலவற்றை அகநானூற்றில் 66-ஆம் பாடலிலும் 86.ஆம் பாடலிலும் கூறப்

படும் திருமண நிகழ்ச்சிகளால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.

கச்சினார்க்கினியர் கருதுமாறு வேள்வியா சான் காட்டிய முறையே அங்கி சான்றாக நிகழும் வதுவைச் சடங்குகள் தொல்காப்பியத்திலும் சங்கச் செய்யுட் களிலும் கானில மக்களுக்குரியவாகக் கூறப்படாமையால் ஆரிய வேதங்களிற் கூறப்படும் வேள்விச் சடங்கிற்கும் பண்டைத் தமிழர் மேற்கொண்டொழுகிய திருமணச் சடங்காகிய கரணத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டெனத் தெளிதல் எளிது. கலித்தொகையில், ஒத்துடை யந்தணன் எரிவலங் கொள்வான் போல்’ என வரும் தொடரிற் புரிநூ லந்தணராகிய வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுத்துரைக்கப் பெற்றிருத்தல் காணலாம். இத்தொடர்ப்பொருளை ஊன்றி கோக்குங்கால், திருமணத்தில் சிைவலம் வருதலாகிய சடங்கு ஒத்துடையந்தணராகிய வேதியவர்களாலன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படாத சடங்கென்பது

கன்கு புலனாகும்.

2. கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும் என கச்சினார்க்கினியர் அடுத்துக் காட்டும் இப்பழமொழி, கற்பியல் வாழ்வில் கரணத்தின் இன்றியசை * கையை வற்புறுத்துவதாகும்: