பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா க டு

பால் உரிமை செய்து ஒழுகலிற் கிழவனுங் கீழத்தியும் என்றார். தாயொடு பிறந்தாருந் தன்னையருந் தாயத்தாரும் ஆசானும் முதலியோர் கொடைக்குரியர் என்றற்கு மர பீனோர் என் றார் .

உ.ம்: உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை (அகம். 86)

இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானுந் தமர் அறிய மணவறைச் சேறலானுங் களவாற் சுருங்கிநின்ற நாண் சிறந்தமையைப் பின்னர்த் தலைவன் வினாவ அவள் மறு மொழி கொடாது நின்றமையைத் தலைவன் தோழிக்குக் கூறிய வாறு காண்க. இதனானே இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று”.

ஆய்வுரை: கற்பினது இலக்கணம் உணர்த்தினமையால் இது கற்பியல் என்னும் பெயர்த்தாயிற்று. அன்புரிமை பூண்டு கள .வொழுக்கம் ஒழுகிய தலைவன். தன்பால் அன்புடைய தலைவியை மணஞ்செய்து கொடுத்தற்கு உரிமையுடைய சுற்றத்தார் கொடுப்ப உலகறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பென்னும் ஒழுக லாராகும். முன்னர்க் களவியலிற் கூறிய வண்ணம் ஒத்த அன் புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் ஆணையால் ஒரிடத் தெதிர்ப்பட்டுக் கூடியொழுகினாராயினும் இருமுதுகுரவர் உடன் பாடின்றி அவ்விருவரும் உலகறிய மனைவாழ்க்கையை மேற் கொள்ளுதல் இயலாது. எனவே காதலர் இருவரும் ஒருவரை யொருவர் பிரியாது வாழ்தற்குரிய தமது உள்ளத்துறுதியினை 'உலகத்தாரறிய வெளிப்படுத்தும் நியதியாகிய திருமணச் சடங் குடன் தலைவன் தலைவியை மணந்துகொள்ளுதல் மனை வாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சியாயிற்று.

1. தாயொடு பிறந்தார்-தலைவியைப் பெற்ற தாயொடு உடன்பிறந்த மாமன்மார். தன்னையர்-தலைவியொடு உடன் பிறந்த தமையன்மார். தாயத்தார்தலைவியின் தந்தையொடு தொடர்ந்த பங்காளிகள். இவர்கள் தலைவியைத் தக்க தலைவனொருவனுக்கு மணஞ் செய்து கொடுத்தற்கு உரிமையுடையவரென்பது தமிழகத்தில் தொன்று தொட்டு நிலவிவரும் மகட்கொடையுரிமை முறையாகும்

3. அகநானூறு 86-ஆம் பாடலிற் கூறப்பட்டுள்ள கரணமாகிய திருமணச் சடங்கு களவின் வழிவந்த கற்பாகும் என கச்சினார்க்கினியர் கூறும் இவ்

விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும்.