பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாடுக தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நச்சினார்க்கினியம் : இது, தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது.

(இ-ள். அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் . தோழி அன்பிலை கொடியையெனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்த னாங்கொல்லோவென ஐயுற்று அவனது குறிப்பை அறிதல் வேண்டியும்; அகன் மலி ஊடல் அகற்சிக் கண்ணும்" - தனது நெஞ்சில் நிறைந்துநின்ற ஊடல் கையிகந்து துனியாகிய வழி இஃது அவற்கு எவனாங்கொல் லென அஞ்சிய வழியும் : கிழவி வேற்றுமைக்கிளவி தோற்றவும் பெறும் - தலைவி தலைவனொடு அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும் பெறும் (எ-று.)

  • நன்னலத் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் அவர் நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ புலவிய தெவனோ அன்பிலங் கடையே." (குறுந். 93)

இதனுள் அவரை அன்பிலை கொடியையென்னா தி, அன்பில் வழி நின் புலவி அவரை என் செய்யும் அவர் நமக்கு இன்றியமை யாத எமரல்லரோவென இருவகையானும் அயன்மை கூறிய

வாறு காண்க. (கஅ}

ஆய்வுரை: இது தலைவிக்குரியதோர் இயல்பு கூறுகின்றது,

(இபள்.) தலைவனது உள்ளக் குறிப்பினை அறிந்து கொள் ளுதலை விரும்பியவிடத்தும் தனது நெஞ்சம் அன்பினால் ஊடல் ;ங்குமிடத்தும் உறவின்மையைப் புலப்படுத்துஞ்சொல் தலைமகள் பால் தோற்றவும் பெறும எ-று.

அகம்மலி ஊடல் அகற்சி - தன்மனத்தேயுண்டாகிய

மகிழ்ச்சி காரணமாக ஊடல் அகலுதல். அகலுதல் - நீங்குதல்.

வேற்று மைக் கிளவியாவது, ஒன்ரிய கேண்மையினரா யொழுகும் காதலர் இருவரிடையே இவர் நமக்கு அயலார் என எண்ணும் வேறுபாட்டுனர்வினைத் தோற்றுவிக்கும் சொல்.

1. உடல் அகற்சி ஊடல் எல்லை. கடந்து துனியாகவிரிவடைதல்,