பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிஅச தொல்காப்பியம்-பொருளதிகாரம்

வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித் தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல் பாண்டில் விளக்கிற் பருஉச்சுட ரழல வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு முன்னோன் முறை முறை காட்டப்பின்னர்

S LSL SS Y 0g gS LL T S S S S S S S S S S S S S S S S S S S S AAAAA AAAA CT M SS S S C S C S AAAA S S AAAA S S SAM S S C C

நூல்கால் யாத்த மாலைவெண் குடை தவ்வென் றசைஇத் தாதுளிமறைப்ப நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் சில ரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே'

(நெடுநல்வாடை-159-188) ான நக்கீரனாரும் கூறிய பாசறை நிகழ்ச்சிகள், எண்ண ரும் பாசறை' என வரும் இத்தொல்காப்பியத் தொடர்க்கு உரிய விளககமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவ தாகும்.

மனைவாழ்க்கைக்குரிய பெண்மைத் தன்மையினராய மகளிர் என்பதுபடப் பெண்' என்றார். புணரார் என் புழிப் புனர் தல் என்னுஞ்சொல் இணைவிழைச்சினைச் சுட்டாது மனத்தார் பொருந்துதலைச் சுட்டிநின்றது.

கடு புறந்தோ ராங்கட் புணர்வ தாகும்.

இளம்பூரணம் : இது மேலதற்குப் புறனடை. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட பாசறைக்கட் புறப் பெண்டிர் புணர்ச்சி பொருந்துவது என்றவாறு.

1. இந்நூற்பாவில் இடம்பெற்றுள்ள "புனர்வது” என்னுஞ் சொல்லுக்கும் புணர்ச்சி பொருந்துவது என இளம்பூரணர் கூறும் பொருள், மாற்ருசை வெல்லும் வழி துறைகளைக்கூர்ந்து ஆராயும் ஆராய்ச்சியினை மேற்கொண்டுறையும் பாசறைச் சூழலுக்கு ஏற்றதாக அமைய வில்லை. இங்குப்புறத்தோன் என்றது. பரத்தையரை ச் சுட்டாது. போர்த்தொழிலுக்கு உதவி புரியும் புறத்திணைக்குரிய மறமுடைய புறப்பெண்டிரைக் குறிக்குமெனக் கொள்ளுதலே பொருந்தமுடையதாகும். ‘புறத்தோராங்கட் புரைவதென்ப என கச்சினார்க்கினியர் கொண்ட பாடம் இக் கருத்துக்கு ஏற்றதாக அமைந்துள்ளமையும் இங்கு கினைத்தற்குரியதாகும். டிரைவது-பொருந்துவது.