பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா கூடு ாஅன்

பொருந்துவது என்ற தளுற் கூட்டமென்று கொன்க. அவரா வார் தாதியருங் கணிகையரும். (உடு}

கூடு. புறந்தோர் ஆங்கண் புரைவ தென்ப நச்சினார்க்கினியம்: இஃது எய்தியது இகந்து படாமற் காத்தது. (இ-ள்) புறத்தோர் ஆங்கண் - அடியோரும் வினவல பாங்கினோருமாகிய அகப்புறத் தலைவருடைய பாசறையிடத் தாயில்; டிரைவது என்ப-அவரைப் பெண்னோடு புணர்த்துப் புலனெறி வழக்கஞ் செய்தல் பொருந்துவது என்று கூறுவர் ஆசிரியர் (எ-று ,

இப் பாசறைப்பிரிவை வரையறுப்பவே ஏனைப் பிரிவு களுக்குப் புணர்த்தலும் புணராமையும் புறத்தோர்க்கு வரைவின் றாயிற்று. {ங்டு) ஆய்வுரை: இது, மேற்கூறியதற்கோர் புறனடை கூறுகின் ஒது.

(இ-ள்) புறத்தினைப் பணிகளுக்குரிய பெண்டிராயின் பாசறையில் தங்கியிருத்தல் பொருந்துவதாகும் எனபர் ஆசிரியர்

-று.

புறத்தோர் என்றது, மனை வாழ்க்கையிாகிய அகத்தினைத் தொடர்பின்றி போர்த்தொழி லுதவியாகிய புரத்தினைப்பணியினை மேற்கொண்ட புறப்பெண்டிரை, போரிற் புண்பட்ட வீரர்க்கு மருந்திட்டுப் பேணுதலும் பாதுகாத்தலும், எண்ணெய்ப்பீவி ரந் ஆதிக் கையிர் பந்தங் கொண்டு பாசறையில் விளக்கேற்றி அவை இரவுமுழுவதும் அவியாமற் பார்த்துக் கொள்ளுதலும் முதலாக அள்ள போர்த்தொழிலுதவிப் பணிகள் பாசறையில் உறையும் புரப்பெண்டிர்க்குரியனவாகும். பாசறையிற் புறப்பெண்டிர்க்குரிய அணிகள் சிலவற்றை ,

' குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் திரவுபகர் செய்யுந் திண்பிடியொள்வாள்

1. புறத்தோர் - அகன் ஐந்திணை யொழுகலாற்றுக்கு உரியதல்லாத அடி யோள், வினைவலபாங்கினோர், ஏவன்மரபின் ஏனோ ஆகிய அகப்புறவொழுக ல்ாத்துக்குரிய மாக்தர்கள்.

புறத்தோன் ஆங்கண்-அகப்புறத் தலைவருடைய பாசறையிடத்து, புனைவது பெண்ணொடு சேர்த்துப்புலனெறி வழக்கஞ்செய்தல் பொருந்துவது.