பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் بني بيئي

விரவுவரிக் கச்சிற் பூண்டமங்கையர்

நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ

கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட'

(முல்லைப்பாட்டு -45-49)

என நப்பூதனார் விரித்துக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத் தகு வதாகும்.

புரைவதென்ப என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம், புரை வது-பொருந்துவது. 'புணர்வதென்ப' எனப்பாடங்: கொண்டு, பாசறைக்கட் புறப்பெண்டிர் புணர்ச்சி பொருந்துவது’ ஏனப் பொருள் வரைந்து அவராவார் தாதியருங்கணிகையரும்' என விளக்கம் தருவர் இளம்பூரணர், மாற்றார் சேனைகளை வென்றடக்கும் போர்த் தொழிற ரிரங்களைக் கூர்ந்து சிந்தித்து ஆராய்தற்கு நிலைக்களை மாகிய அரிய பாசரையிலே அவ்வா ராய்ச்சிக்கு ஊறுவிளைக்கும் நிலையில் காமமயக்கத்தை விளைக் கும் கணிகையரொடும் தாதிய ரொடும் கூடிக் காம நுகர்தல் என் பது எவ்வாற்றானும் பொருந்தாது. எனவே இங்குப் புறத்தோர் எனச் சுட்டப்பட்டோர் போர்த தொழிலுதவிப்பணி மகளிராகிய வீரப்பெண்டிர் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். ஆகவே, புணர்வது என்னும் பாடத்திற்கும் பொருந்துவது' எனப்பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும்.

இனி, புறத்தோர், என்பதற்கு அடியோரும் வினை வல: ஆாங்கினோரும் ஆகிய அகப்புறத்த்ன்லவருடைய பாசறையிடத் திாயின் அவரைப் பெண்ணொடு புணர்த்துப் புலனெறி வழக்கஞ் செய்த்ல் பொருந்துவது' என நச்சினார்க்கினியர் கூறும் பொரு ளும், பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை; உலகியலிற்புறத் திணை யொழுகலாறாகிய போர்த் தொழில் நிகழ்த்தும தல்ைவர் களை அன்பினைந்திணைக்குரிய தலைவர்கள் என்றும் கைக் கிளை பெருந்திணைக்குரிய அகப்புறத் தலைவர் என்றும் பிரித் துக் கூறல் மரபன்மயைானும், பாசறையில் உள்ளோர் யாவராயி னும் தாம் பகைவரை வென்றடக்குதற்குரிய போர்த்திறங்களை ஆராய்தற்குரிய பாசறையில் அகவாழ்க்கைக்குரிய மகளிரொடு தங்கியிருத்தலோ அவர்களை மனத்தால் எண்ணுதலோ கூடா தென அறிவுறுத்தலே மேலைச் சூத்திரத்தின் நோக்கமாதலானும் ஈண்டுப் புறததோர் என்றது அகவாழ்க்கை யுணர்வின்றிப்