பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D தொல்காப்பியம் - பொருளதிகாரம்

மூன்றாமுருபு அகரம் பெற்று ஆன எனத் திரிந்து இடப்பொருள் தந்து நின்றது. (2-)

க. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்

கீழோர்க் காகிய காலமும் உண்டே

இளம்பூரணம்: இதுவுமது.

(இ) - ள்.) மேற்குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வருணர்த்தார்க்கும் புணர்த்த கரணம் கீழோராகிய வேளாண்மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு எ - று.

இதனாற் சொல்லியது, முற்காலத்துக்கரணம் பொதுப்பட நிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும், பிற்காலத்து வேளாண்மாந்தர்க்குத் தவிர்ந்ததெனவுங் கூறியவாறு போலும் . அஃதாமாறு தருமசாத்திரம் வல்லாரைக்கொண் டுணர்க.

1. இந்நூற்பாவில் மேலோர் மூவர்' என்றது, அந்தணர், அரசர், வணிகர் என்னும் மேற்குலத்தார் மூவரையும் குறித்தது எனவும், கீழோர் என்றது. நாலாம். வருணத்தவராகிய வேளாண் மாந்தரைக் குறித்ததெனவும் கொண்டு உரைவரைந்த இளம்பூரண அடிகள், “இதனாற் சொல்லியது, முற்காலத்துக்கரணம் பொதுப்பட கிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும், பிற்காலத்து வேளாண் மாக்தர்க்குத் தவிர்ந்தது எனவும் கூறியவாறு போலும்' என விளக்கந்தருவர். இவ்விளக்கத்தினைக் கூர்ந்து கோக்குங்கால் எல்லார்க்குங் கரணம் பொதுப்பட நிகழ்ந்த முந்காலம் என்றது, தமிழகத்தில் கால்வகை வருணப்பாகுபாடு இடம்பெறாத தொன் மைக் காலத்தினையும் அக்காலத்தில் எல்லா மாந்தர்க்கும் வதுவைச் சடங்காகிய கர ம்ை பொதுவாக அமைந்த திறத்தினையும் *பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத் தவிர்ந்தது என்றது, பிற்காலத்தில் ஒரு குலத்துக்கு ஒரு நீதியாக வருண வேறு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தரும சாத்திரத்தில் வகுக்கப்பட்ட அதுவைச் சடங்கினை வேளாண் மாக்தர் ஏற்றுக் கொள்ளாமையால் அவர்க்கு அது தவிர்ந்தது என்னும் உண்மையினையும் உய்த்துணரவைத்தல் அறியத்தகுவதாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனார். தமிழ் மக்களை நிலவகையாற் பகுத்துரைத்த தல்லது குலவகையாற்பகுத்துரையாமையாலும்,இந் நூற்பாவில் மேலோர் மூவர் என இன்றிவர் என்னும் எண்ணியற் பெயராற் குறிக்கப் பெற்றோர் தமிழகத்தை ஆட்சி புரியும் முடியுடை வேந்தர் மூவருமே என்பதனை 'வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல்.செய்யுளியல்.79) எனப் பின்வரும் நூற்பாவில் ஆசிரியர் தெளி வாகக் குறித்துள்ளமையாலும் கன்குணரலாம். இனி ஈண்டுக் கீழோர்' என்றது அம். மூவேந்தரது ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் எல்லோரையுங் குறிப்பதாகும்.