பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகல் தொல்காப்பியம் - பொருளதிகாரம்

சன வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது.

இளம்பூரணம் : இதுவுமது.

(இ~ள்) விரும்பப்பட்ட கல்விக்கட் பிரியுங் காலம் மூன்றியாண்டின் மிகாது என்றவாறு. எனவே, ஒரியாண்டாயினும் ஈரியாண்டாயினும் ஆமென்பது கொள்ளப்படும். (Pள}

நச்சினார்க்கினியம் : இஃது ஒதலுந் தூதும்’ (தொல். அகத். 26) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய ஒதற்பிரிவிற்குக் கா? வரையறை யின் றென்பது உம் அவ்வோத்து இதுவென்பது உம் உணர்த்துகின்றது.

(இ - ள்.) கல்வி வேண்டிய யாண்டு இறவாது-துறவறத் தினக்கூறும் வேதாந்த முதலிய கல்வி வேண்டிய யாண்டைக்

1. தன்னைப் பயில்வாருள்ளத்திற்கு இன்பம் பயப்பது கல்வியாதலின் கற் 'றேனர் அக்கல்வியினையே மேலும் மேலும் காமுறுவர் என்பார், வேண்டிய கல்வி' என அடைபுணர்த் தோதினார். வேண்டுதல்-விரும்புதல், இத்தொடர்ப் பொருளை விரித்துரைக்கும் கிலையில் அமைந்தது,

“தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்' [399]

சனவரும் திருக்குறளாகும். விலங்கு முதலிய அஃறிணை யுயிர்களோடு உயர்திணை' மக்களைப் பிரித்து உயர்த்துதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது கல்வி என் பதனை வற்புறுத்துங் கருத்துடன் வேண்டிய கல்வி' என அடைபுணர்த்தோ தினா சென்றலும் பொருந்தும்.

'விலங்கொடு மக்களனை யர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்' (திருக்குறள்-410)

சன்பது இக்கருத்துக்கு அரண் செய்தல் காணலாம்,

உயர்திணை மக்கள் எல்லார்க்கும் இன்றியமையாது வேண்டப் பெறுவதாய் அவர்தம் இளமைப்பருவத்தே பயிலப்பெறும் பொதுக்கல்வியுடன், தலைமக்கள் ஒவ் வொருவரும் தத்தம் வாழ்க்கையில் மீண்டும் தனிமுறையிற் கற்றுத் தெளிதற்குரிய சிறப்புமுறைக்கல்விப் பயிற்சியினையே ஒதற்பிரிவில் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளார் என்பது, கற்பியலிற் கூறப்படும் இந்நூற்பாவமைப்புக்கு மிகவும் பொருத்தமுடையதாகும்.