பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

乎徙并 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி ஆலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும் வணக்கஞ்செய்தும் எதிர் மொழியாது வினாயவழிப் பிறராற் கூற்று நிகழ்த்தியும் எதிர்ப்பட்டுழி எழுந்தொடுக்கியும் தான் அக்காலத்து ஒழுகும் ஒழுக்கத்திடத்து முன்னர்க் களவுக்காலத்து நிகழ்ந்த கூட்டத் தருமையைத் தனித்துச் சுழலுதலையுடைய உள்ளத்தோடே 2.சாவிய இடத்தும் தலைவற்குக் கூற்று நிகழும்.

உதாரணம் வந்துழிக் காண்க. 'கவவுக் கடுங்குரையள்' {குறுந் 132) என்பது காட்டுலாரும் உளர். *

அந்தரத்து எழுதிய எழுத்தின் மாண வந்த குற்றம் வழி கெட ஒழுகலும் (வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வழிகெட ஒழுகுதலும்) - களவுக்காலத்து உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய எழுத்து வழிகெடுமாறு போல வழி கெடும்படி பிராயச்சித்தஞ் செய்து ஒழுகுதற்கண்ணும்:

அது முன் புபோலக் குற்றஞ்சான்ற பொருளை வழுவமைத்துக் கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம்.

'பொய்யற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்து நீ மையற்ற படிவத்தால்’’ (கலி 15)

என்றவழி மையற்ற படிவம் எனத் தலைவன் கூறியதனைத் தோழி கூறியவாறு காண்க.

அழியல் அஞ்சல் என்று ஆ யிரு பொருளினும்? - வந்த

HHSAASAASAASAASAASAAASس۔--۔w4 سے ایٹم بمباده ه

1. இளம்பூனர் உரையில் கவவுககடுங்குரையள் (குறுங் - 132) என்ற :ாடல் ..தாரணமாகக் காட்டப் பெறாமையின், இதனை உதாரணமாகக் காட்டிய வேறோர் உரை இக்கற்பியலுக்கு இருந்ததெனத் தெரிகிறது.

2. மையற்றபடிவம் . மாசற்றவிரதம்.

3. 'அழியல் அஞ்சலென் றாயிருபொருளினுக், தானவட்பிழைத்த பருவத்தா னும் என்பதனை ஒருதொடராகவே கொண்டார் இளம்பூரணர். இதனை 'அழியல் அஞ்சல் என்று ஆயிருபொருளினும் எனவும், தான் அவட் பிழைத்த பருவத்தானும்’ எனவும் இருதொடராகக் கொள்வர் கச்சினார்க்கினியர்.