பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு.அ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

சிறப்பாவன: வந்த குற்றம் வழிகெட ஒழுகலும், இல்லறம் திகழ்த்தலும், பிரிவாற்றுதலும், பிறவுமாம். இன்னவிடத்தும் இன்னவிடத்தும் நிகழுங் கூற்றுக்களை வாயிலெதிர் கூறுங் கூற்றோடே தொகுத்துப் பண்ணுதற்கமைந்த பகுதியுடைய வாகிய முப்பத்துமூன்று துறையுந் தலைவன் கண் நிகழ்வன என்று முடிக்க. எடுத்துரைப்பினுந் தந்நிலைகிளப்பினும் அக் கூற்றுக்களையும் வாயிலெதிரொடு தொகை இ யென முடிக்க இவற்றுட் பண்ணிக்கொள்ளும் பகுதியாவன, யாம் மறைந்து சென்று இவனைக் கண்ணைப் புதைத்தால் தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவனென்று உட்கொண்டு காமக்கிழத்தி யாதல் தலைவியாதல் சென்று கண்புதைத் துழித் தலைவன் கூறு வனவும், பள்ளியிடத்து வந்திருந்து கூறுவனவும், இவள் ஊடற் குக் காரணம் என்னென்று தோழி வினாயவழிக் கூறுவனவும், பிரிந்தகாலத்து இவளை மறந்த வாறென்னென்ற தோழிக்குக் கூறுவனவும், பிறவுமாம்.'

"சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன

நலம்பெறு கையினெங் கண்புதைத் தோயே பாயல் இன்றுனை யாகிய பணைத்தோள்

தோகை மாட்சிய மடந்தை - நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே' (ஐங்குறு, 293,

  • தாழிருள் துமிய மின்னித் தண்னென

வீழுறை யினிய சிதறி ஊழிற் கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்கினி வாழியோ பெருவான் யாமே செய்வினை முடித்த செயட் லுள்ளமொ டிவளின் மேவினம் ஆகிக் குவளைக் குறுந்தாள் நாள் மலர் நாறும் நறுமென் கூந்தல் மெல்லணை யேமே” (குறுந் 270)

80. பண்ணிக்கொள்ளும் பகுதியாவன, இத்துறைகளை இடமாகக் கொண்டு விற்காலத்துச் செய்யுன் செய்யும் சான்றோர் காலக்தோறும் புதியனவாக வகுத்துக்கூறும் துறைப்பகுதிகளாகும். இங்கனம் அமைந்த புதிய துறைகள் சிலவற்றைக் குறித்து இவற்றுக்குச் சங்க இலக்கியங்களிலிருந்தும், திருக்குறளிலிருங் தும் கச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டி விளக்கியுள்ளமை இலக்கியங்கண்டதற்

இலக்கணமியம்பும் அவர்தம் நுண்மாண் நுழைபுலனைப் புலப்படுத்துவதாகும்