பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்: ' ரு இங்கி

இரத்தற்கண்ணும், தான் நெருங்குதற்கியலாதவாறு ஊடல் முதிர்ந்த தலைவியை அவளொடு பழகிய வெவ்வேறு பெண்டிர் மூலமாக ஊடலை நீக்குதற் கண்ணும், தன்போன்று பிரிவு காரணமாகத் தனிமையுற்று வருந்திய காதலர் இருவரையும் அவ்வருத்தத் தினின்று நீக்கிய திறத்தின் கண்ணும். நாடிடையிட்டுப் பிரியும் நெடுவழிப் பிரிவின் கண் அஞ்சிய வருத்தத்தின்கண்ணும், மேற் கூறிய நெடுவழியினைக் கடந்து சென்து மீண்டும் அவ்வழியின் கண் திரும்ப நினைத்தவிடத்தும், பொருளைவிடக் காமம் வணி புடைத்தாகிய தன்மையை உளங்கொண்டநிலையிலும், தலைவி யைப்பிரிந்தவழி அவட்கு நேரும் துயர் கருதி அளுசிய நிலையிலும், 'தின்னிற்பிரியேன்' எனத் தலைமகட்குச் சொல்லிய சொல்லைத் தான் தப்பிய நிலையிலும், தலைவியை உடனழைத்துச் செல்லுதல் வேண்டும் என்னும் செய்தியுடன் அவைபோல்வன பிறவற்றையும் தன் மடமைக் குனந்தோன்றக் கூறிய தோழியி னிடத்தும், தான் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டுக்குச் செல் லுதலால் ஆய வருத்தத்தின்கண்ணும், தலைவியைப் பிரிந்து செல் லும் தான் மேலும் செல்லுதலை விரும்பாது மீண்டு திரும்பி வருதலைத் தன்னெஞ்சத்துடன் ஆராயும் பகுதிக் கண்னும், பிரிந்து சென்று வினைமுற்றி மீண்டுவந்துழிப் பெருகத் தோன்றிய சிறப்பின் கண்ணும், பெரும் புகழமைந்த ஊர்தியாகிய தேரினைச் செலுத்தும் பாகற்குக் கூறுதற் கண்ணும், காமக்கிழத்தி மனைவி என்னும் இவர்கள் பாதுகாவல்ாகக் கூறிய கூற்றிற்கு எதிர்மொழி பகருமிடத்தும், பிரிந்து சென்றவிடத்துத் தான் உற்ற வருத்தத் தினை மிகவும் விளக்கித் தலைவியையின்றிச் சென்ற தனது தனிமையை எடுத்துரைக்குமிடத்தும், அரிய செயலைச் செய்து திறைவேற்றிய தனது தலைமைத்தன்மை விளங்கிய காலத்து விருந்தினருடன் நல்லனவற்றை விரும்பிய நிலையிலும், தன்னை எதிர்கொண்டு வரவேற்கும் முறையில் மாலை முதலிய மங்கலப் பொருள்களை ஏந்திய மனைவியரும் மக்களும் சுற்றத்தாரும் மேற்கொண்ட செயல்முறைகளை விரும்பியேற்கும் நிலையிலும், தன்னொடு பழகும் பாணன் முதலிய ஏனைய வாயில்களா யினார் கூறும் கூற்றுக்கு எதிர்மொழி கூறும் கிளவியொடு தொகுத்துப் பண்ணுதலமைந்த கிளவிப்பகுதிகள் முப்பத்து மூன்றும் எண்ணுதற்கு அரிய சிறப்பினையுடைய தலைம் கன் கூறுதற்குரியனவாம் எ-று.