பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சின் s-gij H

பகுதி காத்தலினின்று நீங்கிய பரத்தையரைக் கூடிய கொடுமை; சுடுமென ஒடியாது தகுதிக்கண்ணும் நெஞ்சைச் சுடுமென்று கூறி அவன் தவற்றைக் கூறுதலைத் தவிராமற் கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும்:

இன் நீக்கப்பொருட்டு, பகுதி - கூறுபாடு, ஆகுபெயர்; பகுதிகளைக் காத்தற்குப் பிரிவேனெனக் கூறிப் பிரிந்து பாணர் முதலியோர் புதிதிற் கூட்டிய பரத்தையரிடத்தே ஒழுகிய மெய் வேறுபாட்டோடு வந்தானைக் கண்டு அப்பகுதிகளைப் பரத்தைய ராகக் கூறுவாளாயிற்று. அது, 'இணைபட நிவந்த' என்னும் மருதக்கவியுள்,

'கண்ணிந் கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப்

பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டென்றானோ பேணானென் றுடன்றவர் உகிர்செய்த வடுவினான் மேல்நாள் நின் தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை நாடிநின் தூதாடித் துறைச்செல்லாள் ஊரவர் ஆடைகொண் டொலிக்குநின் புலைத்திகாட் டென்றாளோ கூடியார்ப் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியார் எறிதர ஒளிவிட்ட அரக்கினை; வெறிதுநின் புகழ்களை வேண்டாரின் எடுத்தேத்தும் அறிவுடை அந்தணன் அவளைக்காட் டென்றானோ களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின்மேல் குறிபெற்றார் குரற்கூந்தல் கோடுளர்ந்த துகளினை' (கலி.72)

என்பவற்றாற் பாணர் முதலியோர் வாயிலாயவாறு காண்க.

ஏந்தெழின் மார்ப எதிரல்ல நின் வாய்ச்சொல்...

உருவழிக்கும் அக்குதிரை யூரல் நீ ஊரில் பரத்தை பரியாக வாதுவனாய் என்று மற்றச்சார்த் l திரிகுதிரை யேறிய செல்.’ (கலி 96)

இதனுட் பாணன் துாதாட வாதத்தான் வந்த குதிரை யென்பதனால் அவன் கூட்டிய புதிய பரத்தையர் என்பது உம் அவன் பகுதியினின்று நீங்கியவாறுங் குதிரையோ விறியதென் பது முதலியவற்றாற் கொடுமை நெஞ்சைச் சுடுகின்றவாறும்