பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

කි්. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஒதிப்போந்தார். அவ்வெழுதினையினும் ஒருதலை வேட்கை” யாகிய கைக்கிளையும், ஒப்பில்கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து இருவ ரன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவண் ஐந்திணைக்கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலுமாகிய உரிப்பொருள் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின், அவ்விருவகைக் கைகோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின்பின் கூறப்பட்டது. இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின், வெட்சி தானே குறிஞ்சியது புறனே' (புறத்திணை-நிக) என்னும் மாட்டேறு பெறாதாம், அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க."

மற்றும் அஃது யாங்ங்னம் உணர்த்தினாரோ எனின், ‘காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்'

பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புகர்வுமென்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு’ மறையென மொழிதன் மறையோர் ஆறே.

(செய்யுளியல்-கனஅ)

1. ஒருதலை வேட்கையாவது, ஒருவன் ஒருத்தியென்னும் இருபாலருள் ஒருவரிடத்தே மட்டும் தோன்றும் விருப்பம். இஃது ஒருதலைக் காமம் எனவும் வழங்கப் யேறும். - -

"கைக் கிளை யுடைய தொருதலைக் காமம்' (3) என்பது கம்பியகப் பொருள்.

2. ஒப்பில் கடட்டமாவது, ஒருவன் ஒருத்தியென்னும் இருவரிடையே அன்பின்றி நிகழும் பொருத்தமில்லாத கூட்டுறவு. இது பொருந்தாக் காமம் எனப்படும்.

'பெருந்திணை யென்பது பொருந்தர்க் காம்ம்' (4) என்பது கம்பியகப் பொருள்,

3. அன் பின் ஐக்தினையொழுகலாற்றின் பொது விலக்கணம் உணர்த்தும் அகத்தினையியலின் பின் அதன் சிறப்பியல்புகளாகிய களவு, கற்பு என்னும் ஒழுகலாறு களின் இலக்கணம் உணர்த்தும் களவியல், கற்பியல் என்னும் இயல்களை வைத்தல் முறையாயினும், அங்ஙனம் வைப்பின், ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே' என்பது முதலாக அகத்தினை ஏழனோடும் புறத்தினை ஏழனையும் மாட்டெறிந்து கூறும் புறத்திணை யிலக்கணம் திறப்படப் புலனாக தவாறு களவியலும் கற்பியலும் இடைப் பட்டுக் கிடக்குமாதலால், அகத்தினையியலின் பின் அகத்தொடு தொடர்புடைய புறத்திணையின் இலக்கணங் கூறும் புறத்தினையியலை வைத்து, அகத்தினையின் சிறப்பிலக்கண முணர்த்தும் களவியலை அதன் பின் வைத்தார் ஆசிரியர் என மேலை இயலோடு இவ்வியலுக்குள்ள தொடர்பினை விளக்குவது இவ்வுரைப் பகுதியாகும்.

4. இடங்தலைப்பாடும். பா. வே. 5. அறைந்த சார் பொடு. பா. வே.