பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா க 芬。

என்பதனான் இந்நால்வகையும் இதனுள் உரைக்கப்படுகின்றதென்று கொள்ளப்படும். காமப்புணர்ச்சியெனினும், இயற்கைப்புணர்ச்சியெனி னும், முன்னுறு புணர்ச்சி யெனினும், தெய்வப் புணர்ச்சி யெனினும் ஒக்கும். இவையெல்லாம்.காரணப்பெயர். அஃதாவது' ஒத்தார் இருவர் தாமே கூடுங் கூட்டம். இடந்தலைப்பாடாவது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றைஞான்றும் அவ்விடத்துச்சென்று எதிர்ப் படுதல். பாங்கற் கூட்டமாவது இப்புணர்ச்சி பாங்கற்கு உரைத்து, நீயெமக்குத் துணையாக வேண்டுமென்ற அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்த்தச் சென்று கூடுதல். தோழியிற் கூட்டமாவது, இவற்றின் பின்னர் இக்கூட்டம் நீடச்சேறல் வேண்டித் தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகக் கூடுதல். இவை நான்கும் இம்முறையே நிகழும் என்றுகொள்க. இனி இம்முறைநிகழாது இடையீடுபட்டு (ம்) வரும். அஃதாமாறு, தலைமகள் எதிர்ப்பட்டுழி அன்புடையார் எல்லார்க்கும் இயற்கைப் புணர்ச்சிமுட்டின்றிக்கூடுதல் உலகியல் அன்மையான் தலைமகளை யாதானும் ஒரிடத்து எதிர்ப் பட்ட தலைமகன் அவள் காதற்குறிப்புணர்ந்துநின்று, கூட்டத்திற்கு இடையீடு உண்டாயுழியும்ஆண்டுச்சென்ற வேட்கைதணியாதுநின்று, முன்னை ஞான்று கண்டாற்போலப் பிற்றைஞான்றும் காணலாகுமோ என ஆண்டுச்சேறலும், தலைமகளும் அவ்வாறேவேட்கையான் அடர்ப் புண்டு ஆண்டுவருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். ஆண்டு ஆயத் தாரானாதல் பிறரானாதல் இடையீடுபட்டுழித் தன்வருத்தத்தினைப் பாங்கற்கு உணர்த்தி அவன் தலைமகள் நின்று.ழி யறிந்து கூற, ஆண்டுச்சென்று புனரும். அவ்விடத்தும் இடையீடுபட்டுழித் தோழி வாயிலாக முயன்றெய்தும். இவ்வாறும், ஒரோவொன்று இடையீடு பட்டு வருதலும் உளவாம். அவ்வாறாயின், இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுழிவரைந்தெய்தல்தக்கதன்றோஎனின், வரைந்தெய்துந் திறம் நீட்டிக்குமாயின் வேட்கை நிறுத்தலாற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப. இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுட்களும் இவ்வாறுபொருள் கொள்ள ஏற்பன உள. அவையாவன:

'மருந்திற் lரா மண்ணின் ஆகாது அருந்தவ முயற்சியின் அகற்றலும் அரிதே தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய

1. காமப் புணர்ச்சியாவது,

2. வேண்டுமென்றவழி' என்றிருத்தல் பொருத்தமுடையதாகும்.