பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

や ぶ 、 - f 。た களவியல் - நூற்பா கன் . கல்வி

ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇஅவன் வரைவு வேண்டினவிடத்து அவ் வரைவு 455 வழித் தலைவி தன்னுயர்பு உண்டாகத் தோன்றியது மறுத்த லோடே முற்கூறியவற்றைத் தொகுத்து,

அதன்புறம்’ எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரை. வாயிற்று. தலைவி தன் குடிப்பிறப்புங் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு கூறெனத் தோழிக்குக் கூறுமென்றற்குப், புரைபட வந்த மறுத்தல் என்றார்.

இச் சூத்திரத்து உருபும் எச்சமுமாயவற்றைக் கிழவோண் மேன’ என்பதனோடு முடித்து, முற்றிற்குக் கிளவியென ஒரு பெயர் வெளிப்படுத்து முடிக்க.“ புல்லிய எதிரையும் உடன்படு தலையும் மறுத்தலுடன் தொகுத்தது. - . . . . . . . . .

கிழவோள் மேன என்மனார் புலவர் தலைவியிடத்தது கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு, (16)

ஆய்வுரை

இது, தோழியின் உடன்பாடு பெற்றுத் தலைமகளைக் ಕು! தலைவன், தலைவியை மணந்து கொள்ளுங்காறும் நிகழ்வனவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது.

(இ-ள்.) பக்ற்குறி இரவுக்குறியென்னும் இருவகைக்குறிகளும் தப்பிய நிலையிலும், தலைமகளைக் காணவியலாதவாறு பொழுதும் நீட்டித்த நிலையிலும், தான் தலைமகளது இல்லத்திற்குட் புகப்பெறானாகிக் களவொழுக்கத்தின் மீளுதலின்மையால் தலைமகளைக் காணுதல் வேண்டுமென்னும் பெருவிருப்பத்தால் மீண்டும் குறியிடத்தே சென்று காணப்பெறாது கலக்கமுற்று வேட்கையால் மயங்கிச் செய. லற்று நிற்கும் காலத்தினும், உணவுண்ணுங் காலத்தில் தலைமகளது மனைக்கண் விருந்தினனாகப் புகுந்து தலைமகளை எதிர்ப்பட்ட போது அவளுடைய சுற்றத்தாரால் தள்ளத்தகாத விருந்தாக ஏற்று உபசரிக்கப் பெற்ற நிலையிலும், (தலைமகளும் தோழியும்) விருந்து உபசரிப்பாராக விரும்பி எதிரேற்ற நிலையிலும், தாளாண்மையினை

1. அதன்புறம் என்றது, நொதுமலர் வரை வினை.

2. புரை - உயர்வு.

8, கிழவோள் மேன கிளவி என ஒரு பெயர் வருவித்து முடிக்கப் புெத்தது.