பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உச் ###

தேக லடுக்கத் திருண்முகை யிருந்த குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் இன்னு மோவா ரென்றிறத் தலரே,' (நற்றிணை, 118)

தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பார் நம்மைத் துறத்தலின் நாம் அரியேமாகியது பற்றித் தாமும் அரியராயினார் போலு மென் அவ்விரண்டுங் கூறினாள்.

வந்தவழி எள்ளினும் பெரிதாகிய இடையீட்டினுள் அரிதாகத் தலைவன் வந்தஞான்றும் பெறாதஞான்றைத் துன்பமிகுதியாற் பெற்றதனையுங் கனவுபோன்றுகொண்டு இகழ்ந்திருப்பினும் :

'வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சாவாயிடை

யாரளு ருற்றன. கண்.' (குறள், 1179)

"இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தாற் புணர்வு. ’’ (குறள், 1152)

வரிற்றுஞ்சா வெனவும் புன்கனுடைத்து எனவும் வரவும் பிரிவும் அஞ்சி இரண்டும் நிகழக் கூறினாள் இது முன்னிலைப் புறமொழி. .

'கண்டிரண் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்

பண்டங்கொள் நாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானலுட் கண்டேன் எனக்கெளிந்தேன் நின்ற வுணர்விலா தேன். ' (ஐந். எழு. 61)

இது முன்பு இன்பந் தருவனென உண்ர்ந்துநின்ற உணர்வு கண்டில்லாத யான் புணர்ச்சி வருத்தந்திரும்ென்று தெளிந்தே னென்றா ளென்க.

விட்டு உயிர்த்து அழுங்கினும் --கர்ந்த மறைவின்ைத். தலைவி தமர்க்கு உரைத்தற்குத் தோழிக்கு வாய்விட்டுக் கூறி, அக்கூறியதனையே தமர்கேட்பக் கூறாது தவிரினும்:

உயிர்த்தல், கூறுதல்.

1. விட் டுயிர்த்தல் . உள்ளங்கரந்த மறையினை வாய்விட்டுக் கறுதல். அழுங்குதல் . தவிர்தல்,