பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உஉ গ্রুঞ্জধা

வரைவிடைவைத்த காலத்து வருந்தினும் என்பதனைத் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்’ (தொல்-பொ.666) என்னுந் தந்திரவுத்தியாகக்கொண்டு அதன்கண் வேறுபட வருவன. வெல்லாங் கொள்க.

குறுந் 302: இது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது.

'சிறு புன் மாலை சிறுபுன் மாலை

தீப்பணிப் பன்ன தண்வளி யசைஇச் செக்கர் கொண்ட சிறுபுன் மாலை வைகலும் வருதியா லெமக்கே ஒன்றுஞ் சொல்லாயவர் குன்றுகெழு நாட்டே’’

இது மாலைப்பொழுது ఉrG வருந்திக் கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.

குறுந் 30: இது வரைதற்குப் பீரிய வருந்துகின்றது என்னென்றாட்குக் கனவு நலிவுரைத்தது.

கழைவளர் அடுக்கத் தியலியா டும்.மயில் நனவுப்புகு விறலியில் தோன்று நாடன் உருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து செருச்செய் யானை சென்ன்ெறி வினாஅய்ப் புலர்குரல் ஏன்ற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஒரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. (அகம். 82)

அவனை ஆயத்தார் பலருங் கண்டனரென வந்தோன் முட்டியவாறும் அவருள் நெகிழ்தோளேன் யானேயெனத் தானே கூறியவாறுங் காண்க.

கைந்நிலை, 59, அகம். 248 இவை வத்தோன் செவிலியை எதிர்ந்துழிக் கூறியன.

1. தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடலாவது, தொகுத்துக்ககூறிய சொல்லினானே பிறிதுமொரு பொருள் வகுத்துக் காட்டல் என்னும் தந்திரவுத்தி

யாகும்.