பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ్రీ: தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இன்னும் உலகுரைத் தொழித்தல் என்றதனாற் கையுறைமறையுங் கொள்க.

அருமையின் அகற்சியும் என்பது-தலைவியைக் கிட்டுதற்கு அருமை கூறியகற்றுதல்

அவளறி வுறுத்துப் பின்வாவென்றலும் என்பது - நின்னாற் காதலிக்கப்பட்டாட்குச் சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டு வா என்றவாறு.

பேதைமை யூட்டல்’ என்பது - நேரினும் அவள் அறிவாளொருத்தியல்லள் என்று தலைவற்குக் கூறல்.

இன்னும், பேதைமை யூட்டல் என்பதனால் தோழி தான் அறியாள் போலக் கூறுதலுங் கொள்க.

முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் என்பது - முன்னுறு புணர்ச்சி முறையே நிறுத்துக் கூறலும் என்றவாறு.

நிறுத்துக் கூறலாவது நீங்கவிடாது உடன்பட்டுக் கூறல். இன்னும், முன்புகூடினாற் போலக் கூட அமையுமென்று கூறுதல். உதாரணம் வந்தவழிக் காண்க,

அஞ்சி அச்சுறுத்தலும் எனபது-தான் அச்சமுற்று அஞ்சின தன்மையைத் தலைவற்கு 'அறிவித்தலும் என்றவாறு. அது யாய் வருவ ளென்றானும் தமையன்மார் வருவ ரென்றானும் காவலர் வருவ ரென்றானும் கூறுதல்.

உரைத்துழிக் مهاتهr2ه என்பது-நின்னாற் காதலிக்கப்பட்டாள் யாவள் என வினாயவழி இத்தன்மையாள் எனச் சொல்லக் கேட்ட தோழி அவளும் நின் தன்மையாள் என இவனோடு கூட்டியுரைத்தலும் என்றவாறு.

ஒடு எண்ணின்கண் வந்தது.

1 பேதமையூட்டல் என்பது, தலைமகள் மேற்சேறலுடன் தோழியாகிய தன் மேலும் பொருங்தப் பொதுப்பட அமைந்தமையின், 'தோழி தான் அறியாள் போலக் கூறுதலுங் கொள்க’ என்றார்.

2. உரைத்துழிக் கூட்டம்' என் புழிக் கூட்டம்’ என்றது, தலைவியும் கின் தன்மையள் எனத் தலைமகனது நிலைமையோடு தலைமகளது கிலையையும் ஒப் பிட்டுச் சேர்த்துரைத்தல் என்ற பொருளில் ஆளப்பெற்றது"