பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிஉ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் வலையுந் துண்டிலும் பற்றிப் பெருங்கால் திரையெழு பெளவ முன்னிய கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே. ’’

(நற்றிணை, 207)

இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது. பாற்பட்டனள் எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினாள்.

இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கினொடு கண்ணகன் துர்மணி பெறுஉ நாடன் அறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி எம்மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே, ’’ {குறுந் 379)

இது தாய் கேட்பத் தோழி தலைவிக்குக் கூறியது.

அவன் வரைவு மறுப்பினும்-தலைவி சுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்த வழியும் தோழி அறத்தொடு நிலையாற் கூறும்.

தலைவிக்குக் கூறுவனங் கொள்க.

'அம்ம வாழி தோழி தம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்பவர் இருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்” (குறுந் 146)

இது தமர் வரைவு மறுப்பரோவெனக் கவன்றாட்குத் தோழி கூறியது.

'துண்னேர் புருவத்த கண்ணு மாடும்

மயிர்வார் முன்கை வளையுஞ் செற்றும் களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழு புலி யெழுதரு மழையிற் குழுமும் பெருங்க ணாடன் வருங்கொ லன் னாய். (ஐங்குறு. 218