பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகல் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

9. உரைத்துழிக் கூட்டம். இவை எட்டும் குறையுறவுணர்தலின்

பாற்படும்.

10. வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணம் குறித்தல்: இஃது இருவரும் உள்வழி அவன் வரவுணர்தலின் பாற்படும்.

11. புணர்ந்தபின் அவன்வயின் வணங்கல்.

12. குறைந்து அவட்படர்தல்: அஃதாவது குறைநயப்பச் சேறல்.

13. தன்னொடும் அவளொடும் முன்னம் முன்தளை இப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கு: அஃதாவது குறைநயப்புவகை.

14. நன்னயம்பெற்றுழி நயம்புரி இடம்: அஃதாவது தலைமகள் குறை

நயந்தமை தலைவனுக்குக் கூறல்.

15. எண்ணரும் பல்நகை கண்ணிய வகை: அஃதாவது அலராகு

மென்று கூறுதல்.

18. தலைவன் புணர்ச்சி வேண்டிய நிலை,

17. புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டிய நிலை.

18. வேளாண்பெருநெறி வேண்டிய நிலை.

19. புணர்ந்துழியுணர்ந்த அறிமடச் சிறப்பு: அஃதாவது அல்ல.

குறிப்படுதல்.

20. ஒம்படைக் கிளவி,

21. செங்கடுமொழியால் அன்பு தலையடுத்த வன்புறை: அஃதாவது

தலைவனை இயற்பழித்துத் தலைமகளை வற்புறுத்தல்,

22. ஆறின்னாமை அறிவுறுகலக்கம்: அதாவது தலைவன் வரும்

வழி பல்வேறு தீமைகளையுடையது என்றல்.

29. காப்பின்மிகுதி கையறவுரைத்தல்: அஃதாவது தலைமகளைப் பெற்றோர் இற்செறித்துக் காக்கும் காவல்மிகுதியினைக் கூறுதல்.

24. களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதல் மிகுதி கூறல்