பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塑一

களவியல்-நூற்பா கூஉ ஈ.எ

இரண்டுநாளுந் துணையின்றிக் கழிதல் வழுவாமெனக் கருதின் அதுவும் புறத்தார்க்குப் புலனாம் என்று அஞ்சுதலாற் கழிதலின் வழுவாகாவென்றற்கு வரைவின்று’ என்றார். இன்னோரன்ன கானந் தலைவற்கின்மையின் அவனால் துணையின்றிக் கழிதல் இன்றாயிற்று.

உ-ம்: 'குக்கூ வென்றது கோழி அதனெதிர் துட்கென் றந்றென் நூஉ நெஞ்சம் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே (குறுந்-157)

இது முந்நாளைப் பிரிவாகிய பூப்பிடைப் பிரிவு வந்துழித்

தலைவி கூறியது.

இனி அல்ல.குறிப்பட்டுழி ஒருநாளும் இரண்டுநாளும் இடையீடாமென்றுணர்க. பூப்புநிகழாத காலத்துக் களவொழுக்கம் பூப்பு நிகழ்காலம் வரையப்பட்டதென்று உரைப்பாரும் உளர்; இவ் விதி அந்தணர்க்குக் கூறியதன்று: அரசர் வணிகராதியவர்க்குச் சிறுபான்மையாகவும், ஏனை வேளாளர், ஆயர், வேட்டுவர் முதலி யோர்க்குப் பெரும்பான்மையாகவுங் கூறிய விதியென்றுணர்க. என்னை? பூப்பு நிகழுங்காலத்து வரையாது களவொழுக்கம் நிகழ்த்

தினார்க்கு,

'அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும்’ (தொல். கற்பியல்,5)

என்பதனாற் பிராயச்சித்தம் விதிப்பாராதலின்.

1. இவ்விதி அரசர் வணிகர் முதலியோர்க்குச் சிறுபான்மையாகவும் ஏனை வேளாளர், ஆயர், வேட்டுவர் முதலியோர்க்குப் பெரும்பான்மையாகவும் கூறப்பட்டது: என வும், அந்தணர்க்கு, .

"அங் தரத் தெழுதிய எழுத்தின் மான

வந்த குற்றம் வழிகெட வொழுகலும்: (கற்பியல் . ரு.) என்பதனாற் பிராயச் சித்தம்விதிப்பர்’ எனவும் கச்சினார்க்கினியர் கூறும் வருணவேறு பாட்டிற்குரிய குறிப்பெதுவும் இந்நூற்பாவில் இடம் பெறாமையின் இவ்வுரை தொல்

காப்பியர் கருத்துக்கு மாறுபட்டதெனத் தெளிதல் எளிதாம்.