பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசப் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தலைவி அறத்தொடு நிற்ப, அவள் செவிலிக்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்குமென்று உணர்க. இதனானே பாங்கற்கு உற்றதுரைத்த பின்னர்த் தலைவன் உரையாமையும் பெற்றாம் ', 'புனையிழை நோக்கியும்’ (கலி. 76) என்னும் மருதக் கலியுள், வினவுதியாயின்’ என நாட்டம் நிகழ்ந்தவாறும், அதன் சுரிதகத்துக் கூட்டமுண்மை கூறுதலின் துணைச்சுட்டுக் கிளவி கிழவியதாயவாறுங் காண்க.

'கொடியவுங் கோட்டவும்’ (கலி.54.) என்பதன் சுே தகத்துச் செவிலிக்கு உரையாயெனக் கூறியவாறுங் காண்க. ( . .

ஆய்வுரை

இது, களவொழுக்கத்துக்குரிய துணையினைச் சுட்டுதல் தலைவியின் கடமை என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்.) பலநூறு வகையாலுந் தலைமகள் பால் உளவாகும் நன்மைப் பகுதியாகிய விரும்பத்தக்க சூழ்நிலைகளை ஊன்றிநோக்கும் உணர்வு தலைவனுக்கு வேண்டுமாதலானும் தாங்கள் இருவரும் மேற் கொண்ட அன்பின் வழிப்பட்ட களவொழுக்கம் ஒன்றிய அன்புடைய துணையாகிய தோழியால் புறத்தாரறியாது தொடர்ந்து நிகழ்தல வேண்டுமாதலானும், தனக்குத் துணையாவாள் இவள் எனத் தன் ஆருயிர்த் தோழியைத் தலைவனுக்குச்சுட்டிக்கூறுஞ்சொல் தலைவிக்கு உரியதாகும் என்று.

தலைமகளுக்கு நன்மைகள் உளவாதற்குரிய திறங்கள் எல்லா வற்றையும் எஞ்சாமல் தொகுத்துக் கூறும் முறையிற் பன்னு:று வகையினும் என்றார். நாட்டம் - ஊன்றிநோக்கும் உணர்வு, துணையோர் கருமம் - உள்ளம் ஒன்றிய நண்புடைய துணைவரால்

உற்றதுரைத்த பின்னர்த் தலைவன் உரை ை பு:

பெற்றாம்' என வரும் இவ்வுரைத் தொடர் சங்கவிலக்கிய ஆராய்ச்சிக்குப் பெரிதும்

பயன் தருவதாகும். இதனால் களவொழுக்கத்தில் தலைவன் தலைவி யிருவகைத்

தவிர மூன்றாமவராக இடைகின்று கிறைவேற்றும் பொதுப்பு : க் கி.ெ குததி கே.

யுண்மையும், தலைவனது அன் பின் வழிப்பட்ட களவொழுக்கத்திற்கு இசைவளிதத

லொன்றே பாங்கன் செயலர்தலின் அதுபற்றிப் பின் னுக் தலைவனே வினவுங்கருத்து

பாங்கற்கு இல்லையென் பதும், பாங்கலுள்ள த்தில் அக் கருத்துத் தோன் றி கதை

புலப்படுத்தியவாறாம் என்பதும் கச்சினார்க்கினியக் கருத்தாதல் கன்கு புலனாம்.