பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கம் இக

முற்பிறப்பில் இருவேமாய்க் கூடிப் போந்தனம்; இவ்வுலகிலே இப் புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேறாயுற்ற துன்பத்து இன்று நாமே நீங்குதற்கெய்திய பிரிவரிதாகிய காமத்துடனே இருவர்க்கும் உயிர்போவதாக, இஃதெனக்கு விருப்பமென்றான்; என்பதனால் தந்நிலையுரைத்தலும் பிரிவச்சமுங் கூறிற்று.

குறுந் 300: இது நயப்பும்பிரிவச்சமும் வன்புறையுங் கூறிற்று. குறுந் 40: இது பிரிவரெனக் கருதிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது.

குறுந் 137; அகம். 5: இவை தெளிவகப்படுத்தல்.

'அம்மெல் ஓதி விம்முற் றழுங்கல்

எம்மலை வாழ்ந ரிரும்புனம் படுக்கிய அரந்தின் நவியறுத் துறத்த சாந்ததும் பரந்தேந் தல்குல் திருந்துதழை யுதவும் பண் பிற் றென்ப வண்மை அதனால் பல்கால் வந்து நம் பருவரல் தீர அல்கலும் பொருந்துவ மாகலின் ஒல்கா வாழ்க்கைத் தாகுமென் உயிரே. ’’

இதுவும் அணித்து எம்மிடமென ஆற்றுவித்தது. பயின்றெனவே பயிலாதுவரும் ஆயத்துய்த்தலும், யான் போவலெனக் கூறுதலும் மறைந்து அவட்காண்டலுங், கண்டு நின்று அவனிலை கூறுவனவும், அவளருமை யறிந்து கூறுவனவும் போல்வன பிறவுங் கொள்க. 'யான்றற் காண்டொறும்’ என்னுஞ் செய்யுளுள்,

'நீயறிந் திலையால் நெஞ்சே

யானறிந் தேனது வாயா குதலே’’

என மறைந்து அவட்கண்டு நின்று தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினை.இ நெஞ்சிற்குக் கூறியது,

" கானா மரபிற்று உயிரென மொழிவோர்

நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே

1. கிகழும் என்பதற்குப் பயின்றுவரும் என முன்னர்ப் பொருள் வரைந்தமையின் அப்பொருளை நினைவுகூரும் முறையில், பயின்று' எனவே அதனை விதப்புக்

கிளவியாக எடுத்துரைத்தார் ச் சினார்க்கினியர்.