பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா கல் 岛万人

மற்றைய வழி என்பது-பின்வர வென்றல் முதலாயின. சொல்லவட் சார்த்தலிற் புல்லியவகை என்பது-முன்னுறு புணர்ச்சி முறை நிறுத் துணர்த்தலெண் ஒதப்பட்டது. அறிந்தோளயர்ப் பென்பதுபேதைமை யூட்டல்என ஒதப்பட்டது. கேடு கூறுதலாவது-உலகுரைத் தொழிப்பினும் என ஒதப்பட்டது. பீடுகூறுதலாவது -பெருமையிற் பெயர்ப்பினும் என ஒதப்பட்டது. நீக்கலினாகிய நிலைமை என்பதுஅஞ்சி அச்சுறுத்தலென ஒதப்பட்டது. இவையெல்லாந் தோழி கூற்றினுட் காணப்படும்.

தோழியைக் குறைவுறும் பகுதி 6(4)EL8 frg :-سس

" தோளுங் கூந்தலும் பலபா ராட்டி

வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் தொண்டி அன்ன எற்கண்டு மயங்கிநீ நல்காக் காலே’’ (ஐங்குறு.178)

இனி மடலேறுவல் என்பதற்குச் செய்யுள் : "மாவென மடலும் ஊர்ய பூவெனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடும் மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே (குறுந்,

அவ்வழித் தலைமகன் கூறிய சொற்கேட்டு இஃது அறிவு அருளும் நாணமும் உடையார் செய்யார் எனக் கூறியவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்:

நானொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்’’ (குறள்.1193) எனவும்,

அறிகிலா ரெல்லாரும் என்றேயென் காமம் மறுகில் மறுகும் மருண்டு’ (குறள்.1139)

எனவும் வரும், பிறவு மன்ன மடல்மா கூறாது பிற கூறியதற்குச் செய்யுள் :

'பனைத்தோட் குறுமகள் பாவை தை இயும்

பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள்