பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#ಿಟಿ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் முறையுடை அரசன் செங்கோல் வையத்து யால் தற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானேயிஷ் அழுங்கல் ஊரே' (குறுந்.279) இவ்வாறு இரத்து பின்னிற்றலும் மடலேறுவல்’ என்றலும் கைக்கிளை பெருந்தினைப் பாற்படுமோ எனின், அவ்வாறு வருவன அகத். திணைக்கும் பறத்திணைக்கும் பொதுவாமாறு வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (க.க) நச்சினார்க்கினியம்

இது மேல் இயற்கைப் புணர்ச்சிப் பகுதியெல்லாங் கூறி அதன்வழித் தோன்றும் இடந்தலைப்பாடும் அதன்வழித் தோன்றும் பாங்கற்கூட்டமும் அவற்றுவழித் தோன்றும் தோழியிற் கூட்டமும் நிகழுமிடத்துத் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும் ஆற்றாமை கையிகந்து கலங்கியவழி அவன் மடன்மா கூறுமாறுங் கூறுகின்றது. இதனுள் இருநான்கு கிளவியும்’ என்னுந் துணையும் இடந்தலைப்பாடும் வாயில் பெட்பினும்’ என்னுந் துணையும் பாங்கற்கூட்டமும் ஒழிந்தன தோழியிற் கூட்டமுமாம்.

(இ - ள்.) மெய்தொட்டுப் பயிறல் - தலைவன் தலைவியை மெய்யைத் திண்டிப் பயிலாநிற்கு நிலைமை :

என்றால், இயற்கைப் புணர்ச்சிப்பின்னர்ப் பெருநாணின ளாகிய தலைமகள் எதிர்நிற்குமோவெனின் தான் பிறந்த குடிக்குச் சிறந்த வொழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின், மறையிற் றப்பா மறையோ னொருவனை மறையிற் றப்பிய மறையோன்' போலவும் வேட்கைமிகுதியான் வெய்துண்டு புண்கூர்ந்தார்’ போலவும் நெஞ்சும் நிறையுந் தடுமாறி 'இனிச் செயற்பாலதியாதென்

1. இவ்வாறு இரந்து பின்னிற்றலும் மடலேறுவல் என்றலும் அகத்தினைக் கும் புறத்தினைக்கும் பொதுவாமாறு பண்பிற் பெயர்ப்பினும் என அடுத்து வரும். நூற்பாவால் விளங்கும்.

2. வைதிக கெறியில் வழுவா தொழுகும் மறையோன் ஒருவன் பால் அங் கெறியினின் ஆம் வழுவித் தவறு செய்த மறையோன் தன் தவறுணர்ந்து கலக்க மடைதல் போலவும், உணவின்பால் வைத்த பெருவேட்கையால் தன் முன் வைக்கப் பட்ட சூடான உணவை விரைந்து உட்கொண்டு வாயும் வயிறும் வெந்து புண்ணுற்றார் போலவும் கெஞ்சத்துறுதியினையும் கிறைவினையும் இழந்து கலக்க மடைந்து என்பது இவ்வுாைத தொடரின் பொருளாகும்.