பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಛಿfಿ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உரியாரை யாராய்ந்து பலருள்ளுந் தலைவியாற் பேண்ப்பட்டாள் தனக்கு வாயிலாந் தன்மையையுட்ைய தோழியை அவள் குறிப்பினான் வாயிலாகப் பெற்று இவளை இரந்துபின் னிற்பலென் வலிப்பினும்:

மறைந்து தலைவியைக் கண்டு நின்றான் அவட்கு அவள்” இன்றியமையாமை கண்டு அவளை வாயிலெனத் துணியும்.

உம்- தலைப் புனைக் கொளினே தலைப்புன்ைனக் கொள்ளும்

கடைப் புனைக் கொளினே கடைப் புனைக் கொள்ளும் புனைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலும், o மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிரன் னோளே. (குறுந். 22)

இது தலைவி அவட்கு இனையளென்று கருதி அவளை வாயிலாகத் துணிந்தது. அன்றித் தோழி கூற்றெனில் தலைவியை அருமை கூறினன்றி இக் குறை முடிப்பலென ஏற்றுக் கொள்ளாள் தனக்கு எதமாமென்று அஞ்சி, அன்றியுந் தானே குறையுறுகின்றாற்கு இது கூறிப் பயந்து உமின்று."

'மருந்தில் தீராது மணியின் ஆகாது

அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே தான் செய் நோய்க்குத் தான் மருந் தாகிய தேனிமிர் நறவின் தேறல் போல : நீதர வந்த நிறையழி துயர நின் ஆடுகொடி மருங்குல் நின் அருளின் அல்லது பிறிதில் தீரா தென்பது பின்நின்று

1. அவட்கு அவள் . தலைவியாகிய அவட் குத் தோழியாகிய அவள்.

2. அவனை - அத்தோழியை,

8. தலைவன் தனக்குட் கூறிக்கொண்டதாக இங்கு எடுத்துக் காட்டப்பெற்ற குறுக்தொகை 222 ஆம் பாடல், இறையனார் களவியல் ஒன்பதாம் சூத்திர வுரையில் உடன்பட்டு விலக்கல்’ என்னுக் தோழி கூற்றுக்கு உதாரணமாகக் காட்டப் பட்டுள்ளது. இப்பாடலைத் தோழியின் கடற்றாகக் கொள்ளுதல் தலைவியின் அருமைக்கும் அலட் கு ஏதும் வருமோ என்று அஞ்சும் தோழியின் உட்கோளுக்கும் பொருந்தாது என கச்சினார்க்கினியர் மறுத்தவாறு.