பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઠ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஆய்வுரை

பாங்கா நிமித்தம் பன்னிரண் டென்ப. இது, களவொழுக்கத்தில் தலைவன் தலைவி இருவரும் கூடுதற்கு நிமித்தமாவன இவையெனக் கூறுகின்றது.

(இ-ள்.) அன்பற்றார் இருவர் துணையாய்க் கூடுதற்கு நிமித்தாவன பன்னிரண்டு என்பர் ஆசிரியர்.

. அவையாவன: காட்சி, ஐயம், துணிவு என இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர்க் கூறிய மூன்றும், குறிப்பறிதலின் பயனாய்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடு ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பது மாகும். இவை பன்னிரண்டுமே அன்ப்ொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டத்திற்குக் காரணமாவணவர்தலாற் பாங்கா நிமித்தம் எனப்பட்டன. பாங்கா நிமித்தம் என்பது பாங்கு ஆம் நிமித்தம் எனப் பிரியும். பாங்கு-துணை; நிமித்தம்-காரணம். பாங்கா நிமித்தம்’ என்பதே ஏடெழுதுவோரால் பாங்கர் நிமித்தம்' எனப் படிக்கப்பெற்றிருத்தல் வேண்டும். பாங்கர் நிமித்தம்’ என்ப்து இளம்பூரணர் கொண்ட பாடம்.

ரிச. முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. இனம்பூரணம்

என்-எனின், மேற்சொல்லப்பட்ட பன்னிருவகையினும் கைக்கிளைப் பாற்படுவன வகுத்துணர்த்துதல் துதலிற்று.

எண்வகை மனத்தினுள்ளும் முன்னையவாகிய அசுரம் முதல் மூன்றும் சைக்கிளைப்பாற்படும் என்றவாறு. )િ(G. பின்னர் கான்கும் பெருக்திணை பெறுமே. இனம்பூரணம்

- என்-எனின், மேற்சொல்லப்பட்டவற்றுள் பெருந்திணைக். குரியன உணர்த்துதல் துதலிற்று. * * : * ' , , o, - - - - -

1. முன்னைய மூன்று என்பன, வேதத்திற் கூறப்பட்ட பிரமம் முதலாகவுள்ள எட்டு மணங்களுள் காலவகையாற் பிற் கூறப்படுவனவாகிய அகரம் இராக்கதம் பைசாசம் என்னும் மூன்றும் என வும், பின்னர் கான்கு என்பன காலவகையால் முற்கூறப்பட்டனவாகிய பிரமம் பிரசாயத்தியம் ஆரிடம் தெய்வம் 5 #gi. கான்கும் எனவும், இங்கு முன், பின் என்பன இட வகையினைக் குறித்தன என வும் கொள்வர் கச்சினார்க்கினியர்,