உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள் - (2) # 1 || பொழுதும் ஆறும் காப்பு:மென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலும் தன்னை யழிதலும் அவனு றஞ்சலும் இரவினும் பகலினும் வோ என்றலுங் கிழவோன் தன்னை வாரல் என்றலும் நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள என்ப.' இதன்னையழிதல் - தான் மனனழிக் து கூறல் : கிழவோன் . தலைமகன் குறைபட - குற்றம் பயப்ப} என்று வரைதல் வேட்கைப் பொருளாக வரும் இடங்களைக் காட்டுவர். இளம்பூரணரும் இங்ஙனம் தோழி கூறும் சொற்கள் யாவும் தலைமகளுக்குத் தலைமகன்பால் விருப்பமின்மையாற் கூறப்பட்டன அல்ல; தலைமகளை அவன் விரைவில் மணந்து கொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கையினைப் போருளாக வுடைய சொற்களாகும் என்று விளக்குவர். மேலும் அவர், இவை யெல்லாம் தோழி கூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின், அவை வழுப்போலத் தோன்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறாகாது ஒரு பயன்பட வந்ததென உணர்த்துதலே ஈண்டு ஒதப்பட்டதென்ப. கன்மையுக்தீமையும் பிறிதினைக் கூறலும் என்பது நாடும் ஊரும் இல்லும் குடியும் என ஆண்டோதப்பட்டது. இவை வரைதல் வேட்கைப் பொருளா வாமாறும் ஆண்டுக் காட்டப்பட்ட உதாசீனத்தான் உணர்க' என்று உரைப்பர். தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தொழுகிய நிலையில் இவ்வாறு குறிப்பாகச் சொல்லாது வெளிப்படையாக மறுத்துரைத் தலும் உண்டு என்பது தொல்காப்பிபனாரின் கருத்துமாகும். இதனை அவர், வேட்கை மறுத்துக் கிளத்திாங் குரைத்தல் மரி இய மருங்கின் உசித்தென மொழிப.12 (கிளங்தாங்கு - பட்டாங்கு : மரீஇய மருங்கு - மருவிய பக்கம் : அஃதாவது களவொழுக்கம் ப்ேடித்த இடம்1 என்று குறிப்பர். எடுத்துக்காட்டாக, 11. பொருளியல் - நூற்பா 15 இளம்.) 12. பொருளியல் -நூற்பா 16 இளம்.)