பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹星爱 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 嫁 求,° ம் மன்னக்கின் உணர்ப’’’ "தந்தையும் தன்னையும் முன்னத்தின் (முன்னம் - குறிப்பு] என்ற தொல்காப்பியக் களவியல் நூற்பா இதனை வலியுறுத்தும். இங்கனம் உணர்ந்த பெற்றோர். அந்தத் தலைவனுக்கே அவளை மணம் புரிவிக்க முயல்வாராயின், அது பெரிதும் சிறப்பாக அமையும். அங்ங்னமன்றி வேறொருவனுக்குத் தம் மகளை மணம் பேசினாலும், அன்றி, தலைவனைக காணப்பெறாவண்ணம் அவளை இற்செறிப்புச் செய்தாலும் தலைவிக்கு ஆற்றாமை கைமிக்குத் துயரம் பெருகும். இக்கிலையில் தோழி, இனி, இவள் இறக்துபடவும் கூடும்’ என்று உணர்ந்து கவன்து, வேறு வழி யொன்றும் தோன்றாத நிலையில் இவ்வாறு செய்வாள் : பண்டு தலைவன் வந்து பயின்ற இடத்திற்குத் தோழி சென்று, தலைவனை எதிர்ப்பட்டு அவனைத் தொழுது வலஞ்செய்து, "அம்மால் தலைவிமாட்டுச் செய்யப்பெற்ற தலையளி: உண்மை பாகவே பலரான் அறியப்பெற்றதுடன், கற்றத்தாரது சீற்றத். திற்கும் ஏதுவாயிற்று. வீேர் முன்னரே தலைவியை மணக் து கொள்ள முயலாது, களவொழுக்கத்தே கருத்துக்கொண்டு ஒழுகிய தாலன்றோ இங்கிலை ஏற்பட்டது: அல்லது உம், எதிலரும் வரைக் தெப்தியதற்கு முலைவிலையொடு (பரிசமொடு) புகுந்து பொன்னணிய முந்துற்றார். இனி என் செய்வோம்?’ என்று படைத்து மொழிவாள். இங்கிலையில் தலைவன் தன்னால் செய்யற்பாலது யாது என்று வினவுவான். அதற்குத் தோழி, ேேர சூழ்ந்து சொல்லுதிச் என்று மறுமொழி தருவாள். இதைக் கேட்ட தலைமகன், அவளை உடன்கொண்டு போவது துணிந்தே னெனினும், நிழலும் நீரும் இல்லாத அழல் வெங்கானம் ஆற்றி இல்லாள் கொல்லோ என்று தன் ஐயப்பாட்டைப் புலப்படுத்து வான். அதற்குத் தோழி, அன்ன வெங்கானமெனினும் எம்பெரு மாட்டிக்கு தும்மொடு வசப் பெரிதும் இனியவாம்’ என்று மாற்றம் உசைப்பாள். தலைவனும் ஆயின், என் காதலியை உடன்கொண்டு போக வலித்தேன்; நீ இதனை அவட்கு உணர்த்தி ஆவன செய்க: என்று கூறுவான். தோழியும் அங்ங்னமே செய்து வருவதாகத் தலைவனிடம் விடைபெற்றுச் செல்வாள். தோழி தலைமகளுழைச் சென்று அவள் குறிப்பறித்து, ‘எம்பெருமாட்டி, கம் பெருமான் கினைத் தம்மொடு தம்மூர்க்குக் கொண்டுசெல்லக் கருதுகின்றனர் : கின் குறிப்பு என்னை: என்று: 17 களவியல் நூற். 47 இளம்.) 18. தலையளி - பேரன்பு,