பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劉 25 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்னை வினவக்கூடும். அங்ஙனம் வினவுங்கால் யான் தாய்க்கு மறுமொழி பகரும் கடமையில் உள்ளேன். கான் என்ன எவ்வாறு சொல்லுவேன்; தோழி இவ்வாறு ஆராய்ந்துகொண்டிருக்கும் பொழுது செவிலியும் தலைவியின் உடல், செயல் வேறுபாடுகளைக் கண்டு அருகில் கிற்கும் தோழியை கோக்கி, இவளுக்கு நேர்ந்த வேறுபாட்டின் காரணம் யாதோ?’ என்று வினவுவாள் : அல்லது வெறியாடும் வேலனை . வினவுவாள். இப்போது தோழி வெளிப் படையாக உரைக்காது மேற்கூறியவாறு கட்டுவிச்சிக்கு உரைப்பது போல உரைப்பாள். இதிைத்தான் தோழி செவிலிக்கு அறத்தொடு, கிற்றல் என்று கூறுவர் இலக்கண ஆசிரியர். இவ்வாறே பிறர் அறத்தொடு கிற்றலுக்கும் உரைக்கப்படும். அகப்பொருள் பாடல் களைப் பயிலும் போது இங்கிகழ்ச்சிகளை விரிவாகக் காணலாம். அறத்தொடு நிற்றல் - விளக்கம் : இவ்வாறு முறையுடைய தாகப் பேசும் பேச்சை அறத்தொடு நிற்றல்’ என்று கூறக் காரணம் என்ன தலைவி அறத்தொடு பொருந்தவே நடந்திருக்கின்றாள் என்பதை ஒருவருக்கொருவர் காட்டி கிற்றல்தான் அறத்தொடு சிற்றல் என்பது. அறம் என்பதை இங்கு முறை, தக்கது. என்று பொருள் படுத்த வேண்டும். இறையனார் களவியலுரையாசிரியரும், 1.அறம் என்பது தக்கது தக்கதனைச் சொல்லி நிற்றல் தோழிக்கும் உரித்தென்றவாறு அல்லது உம், பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு, கற்பின்தலை கிற்றல் என்பது உமாம்" என்று குறித்திருப்பது ஈண்டு எண்ணிப் பார்த்தற்குரியது. களவொழுக்க நிகழ்ச்சியைத் தொல்காப்பியரும் குற்றக் தீர்க்த அறச்செய்கையாகும் என்று கருதுவர். தோழியின் கூற்றுகளையெல்லாம் தொகுத்துக் கூறும் ஆசிரியர், முன்னிலை அறன் எனப் படுதலென்று இருவகைப் புரை நீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்." (கிளவி - சொல் புரைதிர் - குற்றம் தீர்ந்த.) என்ற பகுதியினால் இதனைக் குறிப்பிடுவர். இப்பகுதியை, கச்சினார்க்கினியர் 'அறன் எனப்படுதல் இருவகைப் புரை தீர் முன் னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும்: என்று உரைநடைப் படுத்தி 'அறன் என்று சொல்லப்படுக் தன்மை இருவர் கண்ணும் குற்றக்தீர்ந்த எதிர்ப்பாடு என்று செவிலியிடத்தே கூறி அக். இனவியை கற்றாயிடத்தும் செலுத்தினும்” என்று உரை கூறுவர். 5. நூற்பா - 29 இன் உரை. - 7. களவியல் - நூற்பா 23 (கச். (ஆடி 41 . 2}