பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கிகழ்ச்சி ஒரு கல்வினைப் பயனால்தான் நடந்தது என்று மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையாகப் படைத்து மொழியப்படும் திறன்கள் யாவும் அகப்பொருள் நூல்களைப் படித்துத் துய்ப்பார்க்கு எல்லை யற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். சில வழக்காறுகள் : அறத்தொடு நிற்கும் முறையில் தோழி கற்றாகவும் செவிலி கூற்றாகவும் வரும் கிளவிகள் புலவாக ೬೯7ಷ. அவற்றுள் ஒன்று வேலனைக் கொண்டு வெறியாடச் செய்து கழங்கு பார்த்தல் ; மற்றொன்று, கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்டல். இத்தகைய வழக்கமுண்மையைத் தொல்காப்பியர், 'களம்பெறக் காட்டினும் 14 莒 默 孪星 ம் கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்: என்றும் கூறுவர். களமாவது, கட்டும் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறியாட்டிடமுமாகும் என்று பொருள் கூறுவர் கச்சினார்க் கினியர், மேலும், அவர் கட்டினும் கழங்கினும் என்பதற்குக் "கட்டுவிச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டினானும் கழங்கினானும்: என்று கூறுவர். இதனால் கட்டுவிச்சிக்குக் கட்டெடுத்தலும் வேலற்குக் கழங்கு பார்த்தலும் முறையே உரியவை என்பது பெறப்படும். கடடெடுத்தலாவது, கட்டுவிச்சி கெல்குறியறிந்து சொல்லுதல். அவள் குறி பார்த்தற்கு வைக்கும் கெல்லில் பிறர் எண்ணிய எண்ணம் ஒரு வடிவு கொண்டு தோன் றி அவட்கு உரைக்கு மாம். இச்செய்தி கற்றிணை அகநானூறு புறநானூறு குறுக் தொகை: திருக்கோவையார் 20 என்ற நூல்களினாலும் அறியலாம். இன்னும், திருமால்டால் காதல் கொண்டு மயங்கிய பெண் னொருத்தியின்பொருட்டு அவள் சுற்றத்தார் கட்டுவிச்சியிடம் 14. களவியல்-நூற். 26 (அடி-39) (இளம்.) 15. ைநூற் 25 அடி 13.சி) (இளம்) 16. கற்றினை . 288, 357, 17. அகம்-18. 18. புறம்-157. 19. குறுந்-23, 26. 20. திருக்கோவை-செப். 283-85.