பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையுடைப் பேச்சு . 13 f குறி கேட்டதாகத் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய மடலாலும் இச்செய்தியை அறியலாம்.

  • வாராது மாமை அதுகண்டு மற்றாங்கே

ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார் பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல் ஆசானும் மெய்ப்படுவ னென்றார் அதுகேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சி கட்டேறிச் சீரார் சுளகில் சிலகெல் பிடித்தெறியா வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைம்மோவாப் பேரா யிரமுடையான் என்றாள் பெயர்த்தேயும் காரார் திருமேனி காட்டினாள்.' என்ற பகுதியில் இதனைக் காண்க. பண்டைக்காலத்தில் மலை நாட்டுக் குறக்குடி மகளிரே கட்டுவிச்சியாகத் தோன்றிக் குறி சொன்னதாக இலக்கியங்களால் அறிகின்றோம் மலைக்குறத்தியர் நெல்லால் குறி சொல்லும் முறையைக் குமர குருபர அடிகளும் குறிப்பிடுவர். முக்காழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா முறத்திலொரு படிகெலையென் முன்னேவை அம்மே இங்காழி நெல்லையுமுக் கூறுசெய்தோர் கூற்றை இரட்டைபட வெண்ணினபோ தொற்றைபட்ட தம்மே உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வங் துதித்தார் உனக்கினியெண் ணினகருமம் இமைப்பினிற்கை கூடும் என்னாணை எங்கள்குலக் கன்னிமார் அறிய எக்குறிதப் பினும்தப்பா திக்குறிகாண் அம்மே.22 என்ற பாட்டினால் இதனை அறியலாம். குறமகள் - குறியெயினி என்ற பெண்பாற்புலவர் ஒருவர்க்குக் குறி கூறுதல் பற்றிப் பெயர் வழங்குதலையும் அறிகின்றோம்.” குறி கூறும் பெண்டிர் பெரும்பான்மை மலைக்குறத்தியராகவே உள்ளனர் என்பதை “குறம் என்ற பிரபந்தங்களாலும் இன்றும் உள்ள வழக்காலும் அறியலாம். முற்காலத்துக் குறக்குடிச் சிறுவரும் குறியிறுக்க வல்லவராயிருந்தனர் என்பது, 21. சிறிய திருமடல்-கண்ணி 18.22. 22. குமரகுருபர அடிகள்-மீனாட்சியம்மை குறம்-26. 23. கற்றினை-357 ; புறம்-157.