பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 鲁 ァ மேலும் சில அகத்தினை மரபுகள் அன்னை என்னை என்றலும் உளவே தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்ற மரபின என்மனார் புலவர்.கிக் என்று ஆசிரியர் இதற்கு விதி செய்வர். அகப்பாடல்களின் யாப்பமைதி : மனித இனம் வளர்த்த, கலைகள் யாவும் அவ்வினம் வளர்ந்த வரலாற்றை ஒட்டியுள்ளன என்று கலைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். மானிட வாழ்க்கையிலிருந்து முளைத்த கலைகள் வாழ்க்கையில் ஒப்வான இன்பப் பகுதிக்காக என்றே ஒதுங்கி வளர்த்தன என்றும், இவை வாழ்க்கையின் உழைப்புப் பகுதியில் சேராம்ல் இன்பப் பகுதிக்கு மட்டும் உரியவைகளாக கின்றன என்தும் கூறுவர். இவ்வாறு பிறந்து வளர்ந்த இசை என்னும் கலை தொடக்கத்தில் பொரு விளற்ற ஒலியொழுங்கும் பொருளுடைய ஒலியொழுங்கும் கலந்ததாக கின்றது. இன்றும் அவை இசையில் ஒரளவு கலந்தே நிற்பதைக் காணலாம். பொருளற்ற ஒலியொழுங்கு உணர்ச்சியைப் புலப் படுத்தவல்லதாக இருப்பதால்தான் அஃது இன்றும் போற்றப் பெறுகின்றது. பொருள் ஒலிகள் அமைந்த முறையே பாட்டுஎன்பது.

  • பொருளற்ற உணர்ச்சி ஒலிகளையே இசைத்து மிக்க இன்பங்: கண்ட மனிதன், மெல்ல் மெல்ல மாறி, பொருள் ஒலிகளை மிகுதி பாக இசைத்து இன்பம் காணத் தொடங்கினான். பறவைகளைப் போல் உணர்ச்சி ஒலிகளை மிகுதியாக இசைத்த காலத்தில்.ை அவனுடைய செவிப்புன்ை வாயிலாக உள்ளம் குழைந்து இன்புற். றான். இம்மாறுதல் நேர்ந்தபிறகு, பொருள் ஒலிகளை மிகுதியாக இசைத்துப் பயின்றபோது, செவிப்புலன் வாயிலாக மட்டும் அல்லாமல், அறிவின் வாயிலாகவும் உள்ளம் குழைந்து இன்புற்றான். இன்னும் கூறப்புகுந்தால், செவிப்புலம் வாயிலாகப் புகுந்த இன்பம் குறைந்து அறிவின் வாயிலாகப் பெறும் இன்பம் மிகுந்தது எனலாம். இந்த கிலையில், பாட்டு என்னும் கலை, உணர்ச்சி ஒலிகளின் துணையையும் கடந்து, இசைக்கருவி களின் துணையையும் கடந்து வாழவல்லதாய் விளங்கிற்து. பாட்டு’ (Poetry) என்னும் உயர்கலை பிறந்த கிலை இதுவே ஆகும.”* இத்தகைய ஒரு கிலையில் இன்ட உணர்ச்சியைப் புலப்படுத்தும் அகப்பாடல்கள் எழுந்திருக்கலாம். இசையின்பம் மிக்க கலிப்பாட்டும் பரிபாடலும் ஆதியில் அகப்பொருள் பாடலின் யாப்பு முறைகளாக அமைந்தன என்று தொல்காப்பியர் குறிப்பிடுவர்.

45. பொருளியல் - நூற் 50 (இளம்.) - 46. மு. வ. இலக்கிய ஆராய்ச்சி பக். (113.11.சி.)