பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 80 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கடைபெற்றது. இதனை மேற்குறிப்பிட்ட பூரண பொற்குடம் வைக்க என்ற திருச்சிற்றம்பலக்கோவைப் பாட்டால் அறியலாம். மணிமேகலை, சீவகசிந்தாமணி, கைடதம், இராமாயணம், பாரதம், திருவிளையாடற்புராணம் முதலிய இலக்கியங்களில் கூறப்பெறும் திருமண நிகழ்ச்சிக் குறிப்புகளும் திருமணம் பெண்வீட்டில் கடை பெற்றதையே உறுதிப்படுத்துகின்றன. இன்றும் செல்வர் வீட்டுத் திருமணம் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே நடைபெற்று வருதல் உலக இயல்பாக இருத்தலை நாம் காண்கின்றோம். . கட்டுப்பாட்டு வாழ்க்கை : பழங்காலத்தில் மேற்கூறியவாறு தம் வாழ்க்கைத் துணைவரைத் தாமே தேர்ந்தெடுத்து வாழ்க்கை கடத்தி வருங்கால் காலக் கடப்பில் ஒருசிலர் கெறி தவறி விடக்கத் தலைப்பட்டனர். காதலித்த மங்கையைக் காதலிக்கவில்லை என்று கூறினர். களவொழுக்கம் ஒழுகி வாழ்க்கை கடத்திய பிறகு துணை வியைக் கைவிடவும் செய்தனர். இதுகண்ட குலப்பெரியோர்கள் இப்பொல்லாத கோப் பலரிடையேயும் பரவக்கூடுமென்று அஞ்சி ஒருவிதக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். பலர் முன்னிலையில் தம் பெண்ணைப் பெற்றோர் உடன்பட்டுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு முறையை உண்டாக்கினர். இதைத்தான் தொல்காப்பியர், ககொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது” என்று கற்பியல் முதல் நூற்பாவில் குறிப்பிட்டார். இக்கட்டுப்பாட்டின்படியே பின்னர் வந்த எல்லாத் தமிழர்களும் ஒழுகி வந்தனர். இதையே, பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காணம் என்ப.2 (பொப்-செய்த ஒன்றனைச் செய்திலேன் என்றல், வழு-தவறு: அஃதாவது, ஒழுக்கத்து இழுக்குதல் காணம்மணவினை; ஐயர்-குலப் பெரியோர்.} - என்று கூறினர் ஆசிரியர் தொல்காப்பியர். இதற்கு இளம் பூரணர், "பொய்யாவது, செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன் கண் முடிய கில்லாது தப்பியொழுகுதல். காணத்தோடு முடித்த காலையின் இவை இரண்டும் நிகழிாவாமாதலால் காணம் வேண்டிய தாயிற்று" என்று உரை கூறுவர். குலப்பெரியோர்கள் ஏற்படுத்திய மணவினைதான் கரணம் என ஆசிரியரால் சுட்டப்பெற்றது. இதுதான் தலைமகளின் பெற்றோர் கொடுப்பக் கொள்வது. இதை ஆசிரியர் பிறர்வாய்க் 21. கற்பியல்-நூற் 4,