பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் I 61 கேள்வியாக, நூல் வழக்காகக் கேட்டமையின் என்ப’ என்று குறித்தனர். வடநூல் வழக்கு பற்றி நச்சினார்க்கினியர் கரணம்’ என்பதற்குக் கூறும் பொருளையும் அஃதுடன் தொடர்பு கொண்ட வடநூற் கருத்துகளையும் இக்காலத்துத் தமிழறிஞர்கள் ஒப்புக் கொள்வதில்லை. மேற்குறிப்பிட்ட மணவினையில் எவ்வகைச் சடங்கும் இல்லை. மணமக்கள் பெற்றோர் உடன்பட வெளிப்படையாக இல்லறம் கடத்துதலே அம்மணவினையாகும். இக்கட்டுப்பாடு தொல்காப்பி பருக்கு நெடுங்காலத்திற்கு முன்னர் ஏற்பட்டதாகும். இம்முறையே கடைச்சங்க காலம் வரை நடைபெற்றதாகவும், அதன் பின்னரே மேற்குறிப்பிட்ட ஒரு வகை மணவினை வந்திருக்க வேண்டும் என்றும்.இக்கால அறிஞர்கள் கருதுவர். விரிவை அறிய விரும்புவோர் உரிய நூல்களில் கண்டு தெளிவார்களாக, தொல்காப்பியருக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே ஐயர் கரணம் யாத்திருப்பதால், அதற்கு முன்னிருந்த தமிழர் களவும் கற்புமாகிய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்து வந்தமை புலனா கின்றது. இது தமிழர் நாகரிகத்தின் கொடு முடியாக விளங்கு கின்றது. இந்த மனவினை ஐயர் காணம் யாத்த காலக்தொட்டு அந்தணர், அரசர், வணிகர். வேளாளர் என்ற கால்வகைப்பட்ட தமிழ் வகுப்பினருக்கும் ஒன்றாக கடந்து வந்தது. இக்கால்வரிடை யேயும் கொண்டு கொடுத்து வந்த முறை வழங்கி வந்தது. நாளடைவில் முதல் மூவரும் வேளாளருடன் கொண்டுகொடுக்கும் வழக்கம் கின்று போயிற்று. முதல் மூவரும் தம்மோடு தாமே கொண்டு கொடுப்பாராயினர். வேளாளர் தங்களுக்குள் கொண்டு கொடுத்து வந்தனர். மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே...?? என்று தொல்காப்பியரும் நூற்பா செய்தனர். மேலோர் என்றது முதல் மூவரை கீழோர் என்பது இறுதியில் குறிப்பிட்டவரை. கால மும் உண்டே என்ற தொடரால் தொல்காப்பியருக்கு நெடுங்காலத் திற்கு முன் இவ்வழக்கம் இருந்தது என்பது பெறப்படுகின்றது. மேலோச் மூவர்க்கும் கீழோர்க்கும் மனவேற்றுமை ஏற்படா முன் எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றாக மணந்துகொண்டு வாழ்ந்து வந்த 22. கற்பியல் - நூற். 3. தொல்,-11