பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவொழுக்கம் 173 அன்று குறிப்பிடுவர். அக வாழ்வில் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் புகழ்ந்து கோடலும் உண்டு. கிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே-?? என்பது இதற்கு உரிய விதி. இத்தகைய மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் கலித்தொகை 128 ஆம் பாடலுள் தலைவி கூற்றாக மிக அழகாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளதைப் படித்து இன்புறுக. புலவியும் ஊடலும் பெரும்பாலும் தலைவிக்குரியவேலும் சில சமயம் தலைவனிடமும் நிகழ்தல் உண்டு. உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பிலும் புலத்தலும் ஊடலும் கிழவோர்க் குரிய." தலைவி ஊடியவழி தலைவன் தேற்றத் தலைவி தேறும் எல்லையை இகந்தனளாயினும் (கற்பில்) அல்ல குறிப்பட்டதன் காரணமாகத் தலைவி வாராமை குறித்தும் (களவில்) தலைவனிடம் ஊடல் கிகழும் என்பர் ஆசிரியர். இறையனார் களவியல் ஆசிரியர் முன்னதை உணர்ப்புவயின் வாரா ஊடல்" எனக் குறிப்பிடுவர். இச்சமயத்தில் தோழி தலைவனை கெருங்கிப் பிணக்கிணைத் தீர்க்க முயலுவாள். அலக்தாசை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலக்தாரைப் புல்லா விடல். 9 (அலங்தாரை - துன்பம் உற்றாரை : அல்லல் - துன்பம் : புலந்தார் - பிணங்கியிருப்பார் : புல்லா - கலவாது). என்பது தலைவி குறிப்பினால் தோழி கூற்று வக்ததைக் காண்க. இங்ங்ணம் தோழி கூறுதலன்றித் தலைவியும் கூறப் பெறுவள். இதனை கச்சினார்க்கினியர் பாடாண்தினைக் கைக் .கிளையில் அடக்குவர். யானுடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானுரிட யானுணர்த்தத் தானுணராள்--தேனுாறும் கொய்தார் வழுதிக் குளிர்சாங் தணியகலம் எப்தா இராக்கழிந்த வாறு.' 27. பொருளியல் - நூற். - 32. (இளம்.) 28. கற்பியல் நூற் 15. (இளம்.) 29. இறை - கள நூற். 50. 30. குறள் - 1303, 31. முத்தொள்ளாயிர விளக்கம் - 104