பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவொழுக்கம் - 運75。 ஒரோவழி அவ்விருவரும் தங்கள் ஊடல் நீங்காது பிணங்கியே சிற்பாராயின், அறிவர் என்போர் முன்வந்து அவ்விருவர் வாழ்க்கை யினும் தமக்குள்ள வருத்தங் தோன்றக் கழறியுரைப்பர். இவ்வாறு இடித்துரைக்கும் அவராணையை அவ்விருவரும் ஒருபோதும் கடவார். இடித்துவரை நிறுத்தலும் அவர தாருங் கிழவனும் கிழித்தியும் அவர் வரை கிற்றலின். : என்று விதி கூறுவர் தொல்காப்பியர். உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇபுக் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே இஃதோ ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருகலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே." (செரீஇயும் - செருகியும். ஆயம்-பரத்தையர் கூட்டம், துவன்றி.நெருங்கி. வல்சி - ஊதியம். பெருகலம் - மிக்க அழகு! - ஏர் பிடித்தவன் என்ன செய்வான் : பானை பிடித்தவள் பாக்கியம்’ என்பது போன்ற கருத்தால் அறிவர் தலைவனைக் கழறியது காண்க. - மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.’’ இதனைத் தலைவியைக் கழறியதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். பெரும்பாலும் அறம் பொருள் இன்பம் கூறும் அறிவர் கூற்றுகளில் புறப்பொருள் வரும். பேகன் என்ற வள்ளலும் அவன் மனைவியும் ஊடல் ட்ேடித்துப் பெரிதும் பிணங்கி நின்ற போது அவ்விருவரையும் கூட்டுதற்குக் கபிலர் முதலிய அறிஞர் முன் வர்து அவ்வள்ளலுக்கு உறுதி கூறிய செய்தி புறநானூற்றால் அறியலாகும். சோழன் மனைவி ஊடல் நீட்டித்தவிடத்துப் 35. கற்பியல் - நூற். 14. 36. குறுந் - 295. 37. குறள் * 52.